ரசமலாய்

Loading...

ரசமலாய்
தேவையானவை:
பனீர் – ஒரு கப், ரவை, சர்க்கரை – அரை கப், ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன், சர்க்கரை (பனீருடன் சேர்க்க) – 2 டீஸ்பூன், பால் – ஒரு லிட்டர், குங்குமப்பூ – சிறிதளவு, பிஸ்தா – 2 டேபிள்ஸ்பூன்.


செய்முறை:
பனீரை உதிர்த்து, அதனுடன் ரவை, சர்க்கரை (2 டீஸ்பூன்) ஏலக்காய்த்தூள் சேர்த்து மெதுவாக பிசைந்து கொள்ளவும். அதை சிறு உருண்டைகளாக எடுத்து வட்டமாக தட்டிக் கொள்ளவும். பாலை கால் கப் சர்க்கரை சேர்த்து சுண்டக் காய்ச்சவும். அதனுடன் பிஸ்தா, குங்குமப்பூ சேர்த்துக் கலக்கி குளிர வைக்கவும். மீதியிருக்கும் கால் கப் சர்க்கரை, தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சவும். அதில் வட்ட வடிவ பனீரை போட்டு மிதமான தீயில் 15 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும். பிறகு குளிர வைக்கவும். பரிமாறும்போது, ஒரு தட்டில் வட்ட வடிவ பனீர் துண்டுகளைப் போட்டு, அதன் மேல் சுண்டக் காய்ச்சிய பால் ஊற்றி, மேலே சிறிதளவு பிஸ்தா தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply