‘மைக்ரோசாப்ட்’டின் புதிய வீடியோ கேம்..

Loading...

‘மைக்ரோசாப்ட்’டின் புதிய வீடியோ கேம்..மைக்ரோசாப்ட்டின் எக்ஸ்பாக் 360 என்ற விளையாட்டு வீடியோ சாதனம் உலக அளவில் மிகவும் பிரபலமாக வெற்றி நடை போட்டு வருகிறது. இந்த சாதனத்திற்கு உலக அளவில் ஏராளமான ரசிக பட்டாளம் உண்டு.

சமீபத்தில் தனது எக்ஸ்பாக் 360ல் சம்மர் ஆப் ஆர்க்கேட் என்ற புதிய வீடியோ விளையாட்டை களமிறக்க இருப்பதாக மைக்ரோசாப்ட். இந்த விளையாட்டை வரும் ஜூலை 18 முதல் இந்த எக்ஸ்பாக்சில் பெறலாம். மேலும் ஆகஸ்ட் 15 வரை கால நீட்டிப்பும் செய்திருக்கிறது மைக்ரோசாப்ட்

இந்த இடைப்பட்ட காலங்களில் எக்ஸ்பாக்சை வைத்திருப்போர் இந்த விளையாட்டை வாங்கினால் அவர்களுக்கு 400 புள்ளிகளை அதாவது 5 அமெரிக்க டாலர்களை மைக்ரோசாப்ட் வழங்குகிறது.

அதோடு மேலும் பல புதிய கேம்களையும் மைக்ரோசாப்ட் தனது எக்ஸ்பாக்சில் விரைவில் களமிறக்க இருக்கிறது. விளையாட்டு பிரியர்கள் இனி ஆனந்தமாக தங்களது எக்ஸ்பாக்சில் புகுந்து விளையாடலாம்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply