மேங்கோ வெனிலா சந்தேஷ்

Loading...

மேங்கோ வெனிலா சந்தேஷ்
தேவையானவை

பனீர் – கால் கிலோ,
சர்க்கரை பொடி செய்தது – அரை கப்,
வெனிலா எசன்ஸ் – 2 துளிகள்,
மேங்கோ எசன்ஸ் – 2 துளிகள்
ஃபுட் மஞ்சள் கலர் – ஒரு சிட்டிகை
செர்ரி – சிறிதளவு.


செய்முறை:

பனீரை உதிர்த்து நன்றாகப் பிசைந்துகொள்ளவும். மிருதுவாக ஆனவுடன், இனிப்புக்கு ஏற்றவாறு, சர்க்கரையைச் சேர்த்து மேலும் நன்றாகப் பிசைந்துகொள்ளவும்.
இந்தக் கலவையை இரண்டு பகுதிகளாகப் பிரித்து, ஒன்றில் மேங்கோ எசன்ஸையும் மஞ்சள் ஃபுட் கலர் பவுடரையும் சேர்த்துப் பிசையவும்.
இன்னொரு பகுதியுடன் வெனிலா எசன்ஸைச் சேர்த்துப் பிசைந்துகொள்ளவும். ஒரு டிரேயில் இந்த இரு பனீர் கலவைகளையும் ஒன்றன் மேல் ஒன்றாக இருக்குமாறு வைத்து, சமமாகப் பரப்பி, ஃப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் வைத்து, ஸெட் ஆனதும் எடுக்கவும். விருப்பமான வடிவில் துண்டுகள் போட்டு, மேலே செர்ரி பழங்களை வைத்து அலங்கரிக்கவும். இது பெங்காலி ஸ்வீட்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply