மெஹந்தி நீண்ட நாட்கள் நீடிக்க வேண்டுமா…?

Loading...

மெஹந்தி நீண்ட நாட்கள் நீடிக்க வேண்டுமா...பண்­டிகை காலங்­களில் பெண்கள் தங்கள் கைகளில் பல டிசைன்­களில் மெஹந்­தி­களை வைத்துக் கொள்­வார்கள்.

அப்­படி வைக்கும் சில பெண்­க­ளுக்கு மட்டும் மெஹந்தி நல்ல நிறத்தில் பிடிக்­காது. உங்­க­ளுக்கும் அப்­ப­டி­யென்றால் இக்­கட்­டுரை மிகவும் பய­னுள்­ள­தாக இருக்கும்.

இக்­கட்­டு­ரையில் கொடுக்­கப்­பட்­டுள்ள சில டிப்ஸ்­களை பின்­பற்­றினால், நிச்­சயம் உங்கள் கைகளில் மெஹந்தி நல்ல நிறத்தில் பிடிப்­ப­தோடு, நீண்ட நாட்­களும் இருக்கும்.



சமையல் எண்ணெய்:

மெஹந்தி நல்ல நிறத்தில் பிடிக்க வேண்­டு­மானால், அதை கைக­ளுக்கு வைக்கும் முன் கைகளில் சமையல் எண்­ணெயைத் தடவிக் கொள்­ளுங்கள்

எலு­மிச்சை மற்றும் சர்க்­கரை:
எலு­மிச்சை சாற்றில் சர்க்­கரை சேர்த்து கலந்து, அக்­க­ல­வையை கைகளில் வைத்த மெஹந்தி காய்ந்த பின்னர் பஞ்சின் உத­வியால் தடவி 15 நிமி­டங்கள் வைத்­தி­ருந்தால், மெஹந்தி நல்ல நிறத்தில் கைகளில் பிடிக்கும்.



கடுகு எண்ணெய் அல்­லது விக்ஸ்:
மெஹந்தி வைத்து நன்கு உலர்ந்த பின்னர், அதனை நீரில் கழு­வாமல், உலர்ந்­ததை சுரண்டி எடுத்­து­விட்டு, கைகளில் கடுகு எண்ணெய் அல்­லது விக்ஸ் தட­வினால், கையில் உள்ள மெஹந்­தியின் நிறம் அதி­க­ரிக்கும்.



கிராம்பு புகை:

கைகளில் உள்ள மெஹந்­தியில் எலு­மிச்சை சாற்­றினைத் தட­விய பின், ஒரு வாண­லியில் கிராம்பை போட்டு நன்கு வறுத்து அடுப்பை அணைத்­து­விட்டு, அப்­போது வாண­லியில் உள்ள கிராம்பில் இருந்து வெளி­வரும் புகையில் கைகளை சிறிது நேரம் காட்ட வேண்டும்.

இதன் மூலமும் மெஹந்­தியின் நிறம் அதி­க­ரிக்கும்



குறிப்பு ….:

கைகளில் மெஹந்தி வைத்தால் குறைந்­தது 4–-5 மணி­நேரம் வைத்­தி­ருப்­ப­தோடு, 1–2 மணி­நே­ரத்­திற்கு கைகளை நீரில் கழு­வக்­கூ­டாது.

அப்படி கழுவினால், கைகளில் உள்ள மெஹந்தியின் நிறம் மங்க ஆரம்பிக்கும்.

Loading...
Rates : 0
Loading...
VTST BN