மூளையின் ப்ளாஷ்பாக் திறமை நோர்வே தம்பதிக்கு நோபல் பரிசு

Loading...

மூளையின் ப்ளாஷ்பாக் திறமை நோர்வே தம்பதிக்கு நோபல் பரிசுமருத்துவம் மற்றும் உடற்கூறியல் துறைக்கு 2014ஆம் ஆண்டுக்காக வழங்கப்படும் நோபல் பரிசை அமெரிக்கா, நோர்வே நாட்டைச் சேர்ந்த மருத்துவ விஞ்ஞானிகள் மூவர் வென்றுள்ளனர். இவர்களில் நோர்வே நாட்டைச் சேர்ந்த மருத்துவத் தம்பதியினரும் அடங்குவர். ஜான் ஓகீஃபே மூளை உயிரணுக்கள் குறித்த கண்டுபிடிப்புக்காக அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஜான் ஓகீஃபே மற்றும் நோர்வே நாட்டைச் சேர்ந்த மருத்துவ தம்பதியரான மே-பிரிட் மோசர், எட்வர்ட் ஐ மோசர் ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. நாம் எங்கே இருக்கிறோம் என்பதை எப்படி நம் மூளை அடையாளம் காண்கிறது? ஓர் இடத்தில் இருந்து இன்னொரு புதிய இடத்திற்கு எப்படி நம்மால் சரியாக செல்ல முடிகிறது? அதே பாதையில் அடுத்த முறை செல்லும்போது எப்படி மூளை அதை நினைவில் வைத்துக் கொள்கிறது. செல்போன்களில் இருக்கும் ஜி.பி.எஸ். போல் மூளையில் செயல்படும் அந்த ப்ளாஷ்பாக் அணு எது? இதைத் துல்லியமாக கண்டுபிடித்து சாதனை புரிந்ததற்காகவே, அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் ஓ கீஃபே, நோர்வேயைச் சேர்ந்த மருத்துவ தம்பதி மே-பிரிட் மோசர், எட்வர் ஐ மோசருக்கும் மருத்துவ நோபல் பரிசு வழங்கப்படுகிறது

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply