முற்பதிவில் சாதனை படைத்த Xiaomi Mi 5

Loading...

முற்பதிவில் சாதனை படைத்த Xiaomi Mi 5சீனாவின் பிரபல இலத்திரனியல் சாத உற்பத்தி நிறுவனமான Xiaomi ஆனது இன்றைய தினம் Mi 5 எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்கின்றது.
இந்நிலையில் இக் கைப்பேசியினை கொள்வனவு செய்வதற்காக கடந்த வாரம் முதல் முற்பதிவு செய்வதற்கு அனுமதி வழங்கியிருந்தது.

இவ்வாறு அனுமதி வழங்கப்பட்ட ஒரு வாரத்திலேயே 14.4 மில்லியன் வரையான பயனர்கள் முற்பதிவு செய்ததன் மூலம் புதிய சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

இக் கைப்பேசியானது 5.15 அங்குல அளவுடையதும், 1920 x 1080 Pixel Resolution உடையதுமான IPS தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன், Qualcomm Snapdragon 820 Processor, பிரதான நினைவகமாக GB RAM மற்றும் 32GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டுள்ளது.

இவை தவிர 16 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 4 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.

இதன் விலையானது 260 டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply