முதல்முறையாக லெனோவாவின் களத்தில் டேப்லெட்

Loading...

முதல்முறையாக லெனோவாவின் களத்தில் டேப்லெட்இதுவரை கணினி மற்றும் லேப்டாப்புகளை தயாரித்து வந்த லெனோவா நிறுவனம் தற்போது முதன் முதலாக டேப்லெட் ஆடுகளத்தில் குதிக்க இருக்கிறது. அதாவது லெனோவா ஐடியாடேப் எஸ்2109 என்ற ஒரு புதிய டேப்லெட்டைக் களமிறக்க இருக்கிறது.

இந்த புதிய டேப்லெட் ஆன்ட்ராய்டு இயங்கு தளத்தில் இயங்கும். இது 9.7 இன்ச் அளவில் வருகிறது. மேலும் டிஐ ஒஎம்பிஎபி 4430 ப்ராசஸரைக் கொண்டிருக்கிறது. அதனால் இது வேகமாக இயங்கும் சக்தி கொண்டது.

இந்த டேப்லெட்டின் ஐபிஎஸ் எல்சிடி திரை மிகவும் துல்லியமாக இருக்கும். குறிப்பாக வீடியோக்கள் பார்ப்பது மற்றும் விளையாட்டுகள் விளையாடுவது போன்றவற்றிற்கு இந்த திரை மிகவும் வசதியாக இருக்கும்.

இந்த டேப்லெட்டின் இடது உச்சியில் 1.3எம்பி முகப்பு கேமரா உள்ளது. இதன் மூலம் தடையில்லா வீடியோ உரையாடலை நடத்தலாம். மேலும் இந்த டேப்லெட்டில் மைக்ரோ எச்டிஎம்ஐ போர்ட், மைக்ரோ யுஎஸ்பி மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் போன்றவை உள்ளதால் தகவல் பரிமாற்றத்தையும் இதில் எளிதாக மேற்கொள்ள முடியும்.

இதில் இருக்கும் எஸ்ஆர்எஸ் சரவுண்ட் சவுண்ட் ஸ்பீக்கர்கள் மூலம் சூப்பராக பாடல்களைக் கேட்கலாம். ஆன்ட்ராய்டு 4.0 ஐதிஎஸ் இயங்கு தளத்தில் இந்த டேப்லெட் இயங்குவதால் ஆன்ட்ராய்டு ஸ்டோரிலிருந்து எளிதாக அப்ளிகேசன்களைப் பதிவிறக்கம் செய்யலாம்.

மேலும் இந்த டேப்லெட் அக்குவெதர் எவர்நோட், அடோப் ப்ளாஷ் ப்ளேயர், கோ கீபோர்டு, ஆப் ஷாப், டாக்குமென்ட்ஸ் டூ கோ, மூவி ஸ்டூடியோ, பிரிண்டர்ஷேர், ஸ்கைப், நியூஸ் ரிபப்ளிக், நார்ட்டன் செக்யூரிட்டி, லெனோவா பீப்பிள் ஹப், யூடியூப், சுகர்சின்க், வாய்ஸ்நோட் மற்றும் சினியோ போன்ற எண்ணற்ற அப்ளிகேசன்களை தனக்குள் வைத்திருக்கிறது.

இந்த லெனோவா டேப்லெட் 7 மணி நேர இயங்கு நேரத்தைக் கொண்டிருக்கிறது. இதன் விலை ரூ.18,000 ஆகும். இந்த புதிய லெனோவா டேப்லெட் சாதிக்குமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply