முதலாளிகள் தங்களது பணியாளர்களை Facebook இல் கண்காணிப்பர்

Loading...

முதலாளிகள் தங்களது பணியாளர்களை Facebook இல் கண்காணிப்பர்பல முதலாளிகள் ஏற்கனவே தங்களது பணியார்கள் பற்றி Facebook இலும் Twitter இலும் மேலும் பல சமூக வலையமைப்புகள்மூலமும் கண்காணித்துத்தான் வருகின்றார்கள்.

எனினும் இந்த வீதம் 2015 அளவில் 60 வீதமாக உயருமென தரவு ஆய்வுநிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தனிநபர்களைப் பற்றி அறிவது ஆபத்தைத் தருவதாக இருந்தாலும் இதனைக் கவனமாகவும் சட்டரீதியாகவும் செய்யவேண்டும். பெரும்பாலான முதலாளிகள் தங்களது நிறுவனம் பற்றிய கருத்துக்கள், எதிர்க்கருத்துக்கள், தகவல்கள் ஏதாவது பணியாளர்களால் வெளிவிடப்படுகின்றனவா என்பதைக் கண்காணிப்பர்.

ஒரு வேலைக்கு அழைக்கப்படும்போது அதில் Facebook இன் கடவுச்சொற்களும் கேட்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது. எனினும், இந்த முறை அமெரிக்காவில்தான் அதிகமாகக் காணப்படுகின்றது.

எனினும் இதனால் தமது தனிப்பட்ட விடயங்களில் முதலாளிகள் மூக்கை நுழைக்கின்றார்களென்ற சீற்றமும் அனைவரிடமும் எழுந்திருந்தது.

பொதுவாக விடப்பட்ட Facebook பக்கங்களாயின் அவற்றை முதலாளிகள் பார்த்து அவர்களது விபரங்களைச் சேகரிக்கின்றனர். எனினும் தனிப்பட்ட ரீதியில் விடப்பட்ட பக்கங்களால் அவர்களால் பணியாளர்கள்பற்றி அறியமுடியாமலிருக்கும்.

இதனால் கடவுச்சொற்கள் கேட்காத நிறுவனங்கள் வேறு முறைகளைத் தேர்ந்தெடுக்கின்றன. இதில் விண்ணப்பதாரிகளை மனித உரிமை நிர்வாகிகளுடன் பழக்கமாகும்படியோ அன்றி ஒரு நிறுவனத்தின் கணினிமூலமாக நேர்முகப் பரீட்சைக்குச் சமூகமளிக்கும்படியோ கூறுகின்றது.

இவர்களைத் தெரிவுசெய்ததும் ஓர் ஒப்பந்தத்தில் இவர்கள் கையெழுத்திடப் பணிக்கப்படுவர். இதனால் ஒரு முதலாளிபற்றி சமூக ஊடகங்களில் எதிர்க்கருத்துக்களைத் தெரிவிப்பதை இது தடுக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளும்.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply