முட்டைக்கோஸ் கேரட் உசிலி

Loading...

முட்டைக்கோஸ்  கேரட் உசிலி
தேவையானவை:
முட்டைகோஸ் – 200 கிராம், கேரட் – 50 கிராம், தேங்காய் துருவல், கடலைப்பருப்பு, நறுக்கிய வெங்காயம் – தலா கால் கப், பச்சை மிளகாய் – 2, எண்ணெய் – 3 டீஸ்பூன், உப்பு – ருசிக்கேற்ப, கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு.

செய்முறை:
கடலைப்பருப்பை ஊறவைத்து, கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும். கோஸ், கேரட் இரண்டையும் பொடியாக நறுக்கவும். அரைத்த கடலைப்பருப்பு, கோஸ், கேரட், உப்பு சேர்த்துப் பிசறி, இட்லித் தட்டில் வைத்து ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். ஆறிய பிறகு உதிர்த்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, கறிவேப்பிலை, வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு, உதிர்த்து வைத்திருக்கும் காய், பருப்புக் கலவையைப் போட்டு, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறவும். சுவையான உசிலி தயார். கோஸ் சாப்பிடாத குழந்தைகளுக்கு இந்த முறையில் செய்துகொடுக்கலாம்.

பலன்கள்:
எலும்பு வலுவிழந்து (ஆஸ்டியோபோரோசிஸ்) இருப்பவர்களுக்கு சிறந்த ஊட்ட உணவு. ரத்த அணுக்கள் உருவாகத் துணைபுரியும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply