முடக்கத்தான் கீரைத் தொக்கு

Loading...

முடக்கத்தான் கீரைத் தொக்கு

தேவையானவை:
சுத்தம் செய்து, ஆய்ந்த முடக்கத்தான் கீரை – ஒரு கப், காய்ந்த மிளகாய் – 5, இஞ்சி – ஒரு துண்டு, பூண்டு – 6 பல், புளி – சிறிய நெல்லிக்காய் அளவு, எண்ணெய் – 6 டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், உப்பு – ருசிக்கேற்ப.


செய்முறை:
கடாயில் எண்ணெய்விட்டு முடக்கத்தான் கீரை, காய்ந்த மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவேண்டும். இதனுடன் புளி, உப்பு சேர்த்து, அம்மி அல்லது மிக்ஸியில் நன்கு அரைக்கவும். மீண்டும் சிறிது எண்ணெய்விட்டு, கடுகு தாளித்து, அரைத்த தொக்கைப் போட்டு, எண்ணெய் கக்கும் வரை வதக்க வேண்டும். நன்றாக ஆறியதும் எடுத்துவைத்தால், ஒரு மாதம்வரை கெடாமல் இருக்கும்.


பலன்கள்:
மூட்டுவலிக்குச் சிறந்த நிவாரணி. வயிறு உப்புசம் தீரும். எலும்புகளுக்கும் தசைகளுக்கும் வலு ஊட்டும். ரத்தசோகையை நீக்கி, புத்துணர்ச்சியை உடலுக்குத் தரும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply