முகம் பொழிவுப் பெற சில அழகுக் குறிப்புகள்!

Loading...

முகம் பொழிவுப் பெற சில அழகுக் குறிப்புகள்!சிலருக்கு முகத்தில் காது, கால், கைகளில் நிறைய முடிகள் இருக்கும். அவர்கள் வேப்பங்கொழுந்து, குப்பை மேனி இலை, விரலி மஞ்சள் அரைத்துப் பூசி பத்து நிமிடம் உலரவிட்டு பின் கழுவினால் முடி உதிர்ந்துவிடும்.

*பழுத்த வாழைப்பழத்துடன் பால் கலந்து முகத்தில் பூசுங்கள். முகம் பளப்பளக்கும்.

*பப்பாளிப்பழம், எலுமிச்சை சாறு கலந்து தடவவும். முகத்துக்கு நல்ல நிறம் கிடைக்கும்.

* ஆரஞ்சு சாறை குளிர்சாதன பெட்டியில் வைத்து கட்டியாகி ஒரு வெள்ளை துணியில் கட்டிக்கொண்டு கண்களுக்கு மேல் ஒத்தி எடுக்கவும். கண்கள் குளிர்ச்சியாக இருக்கும்.

* வெள்ளரிக்காய் சாற்றில் முல்தானிமெட்டி, பால் சேர்த்து முகத்தில் பூசி பிறகு கழுவி விடவும். வெய்யிலில் கருத்த முகம் பொலிவு பெரும்.

* தர்பூசினி பழ்ச்சாறு, பயத்தம்மாவு கலந்து முகத்தில் பூசினால், முகம் புதுப்பொலிவு பெறும்.

* தக்காளிப்பழத்தை முகத்தில், கைகளில் தடவி வரவும். கைகள் மிருதுவாக இருக்கும்.

* முகத்தில் பருக்கள் இருந்தால் வெள்ளைப் பூண்டையும், துத்தி இலையையும் சம அளவு எடுத்து அதை நறுக்கி, பின் நல்லெண்ணெயில் போட்டுக் நன்கு காய்ச்சி தினசரி பருக்கள் உள்ள இடத்தில் தடவி வந்தால், விரைவில் பருக்கள் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

* உடம்பில் தழும்புகள் இருந்தால் அந்த இடத்தில அவரை இலையின் சாற்றை பூசி வந்தால் தழும்புகள் படிப்படியாக மறைய ஆரம்பிக்கும்.

* தோல் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்க வேண்டும் என்றால், கொத்தமல்லி இலையில் சாறு எடுத்து அதில் சிறிதளவு கஸ்தூரி மஞ்சள்தூளைக் கலந்து தோல் மீது தடவி வந்தால் தோல் மிருதுவாகவும் பளபளப்பாகவும் மாற ஆரம்பிக்கும்.

* பார்லி பவுடரையும் மஞ்சள் தூளையும் 4:1 என்ற விகிதத்தில் நல்லெண்ணெய்யுடன் கலந்து உடல் முழுவதும் பூசி பின் குளித்து வந்தால் தோல் மென்மை பளபளப்பு கூடும்.

* கழுத்தில் ஏற்படும் சுருக்கங்களை நீக்க முட்டையின் வெள்ளைக் கரு, கிளிசரீன், ரோஸ்வாட்டர் கலந்து பேஸ்ட்டாக்கி கழுத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவுங்கள்.

* அப்பிள் பழத்தை சின்னச்சின்ன துண்டுகளாக வெட்டி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணெய்ப் பசை குறையும்.

* மென்மையான, ரோஜா நிற இதழ்களைப் பெற கொத்தமல்லிச் சாறால் உங்கள் உதடுகளை அவ்வப்போது `மசாஜ்’ செய்யுங்கள்.

இப்படி தினமும் 10 அல்லது 15 நிமிடங்கள் நம் அழகுக்காக ஒதிக்கிவைத்தால், வயதனாலும் இளமையாக இருக்கலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply