முகப்பரு வரக்காரணம் என்ன தெரியுமா? : படித்துப் பாருங்கள்…!

Loading...

முகப்பரு வரக்காரணம் என்ன தெரியுமா படித்துப் பாருங்கள்...!பருவ வயதில் ஆன்ட்ரோஜன் என்னும் ஹோர்மோன் ஆண், பெண் இருபாலருக்கும் சுரக்க தொடங்கும்.

சில சமயங்களில் ஆன்ட்ரோஜன் அளவுக்கு அதிகமாகச் சுரக்கும்போது முகப்பரு உண்டாகிறது. (எல்லாம் வயசுக் கோளாறு என்று சிலர் நக்கல் செய்வதை கவனத்தில் கொள்ளவும்!)

சருமத்தில் கொழுப்புச் சுரப்பிகள் உள்ளது, அவை சீபம் என்ற எண்ணைப்பசை போன்ற ஒரு பொருளை வெளியேற்றுகிறது.

இவை மயிர்க் கால்களில் தங்கி சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கப் பயன்படுகின்றன.

பருவ வயதில் சுரக்கும் அதீத ஆன்ட்ரோஜன் இந்த எண்ணைப்பசையை மிக அதிகமாக சுரக்க வைக்கின்றன. அப்போது அவை மயிர்க்கால்களில் வழக்கத்தைவிட அதிக அலவில் படிந்து, திரண்டு, ரவை போன்ற முகப்பருக்களை ஏற்படுத்துகின்றன. சில சமயங்களில் பாக்டீரியா கிருமிகள் பருக்களில் தொற்றிக்கொள்ள, பருக்கள் பெரிதாக வீங்கிக் கொள்கின்றன.

பருக்கள் வருவதை விட, அவை விட்டுச் செல்லும் வடுக்கள்தான் அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

பருக்கள் வராமல் தடுக்கவும், பரு வடுவைப் போக்கவும் வழி உள்ளதா? பருக்கள் வந்ததால் முகத்தில் இருக்கும் ஓரு வடுக்களை நிச்சயமாக போக்க முடியும்.

முதலில் வடுக்கள் ஏன் ஏற்படுகின்றன என்றால், முகப்பரு வந்ததும் அதனை நகத்தால் கீறுகிறார்கள்.

நகம் பட்டாலே வடு விழுந்துவிடும். அதனை உடனடியாக போக்க முடியாது. சிறிது காலம் பிடிக்கும்.

சிலருக்கு பருக்கள் வந்து முகத்தில் சிறிய பள்ளங்களே ஏற்பட்டிருக்கும். சிலரது முகத்தைப் பார்த்தால் தேங்காய் சிறட்டை போல் இருக்கும்!

முகப்பரு வந்தால் அதனை நீக்குவதற்கு முன்பு, ஐஸ் கட்டிகளால் ஒத்தடம் கொடுத்த பிறகு அதில் கை வைப்பது நல்லது.

இதனால் பருக்களின் வழியாக இரத்தம் வெளியாவது தவிர்க்கப்படுகிறது.

பொதுவாக பருக்கள் வந்தால் அது முற்றிய நிலையில் அதில் இருக்கும் வெள்ளையான திரவத்தை எடுத்து விடுவது மிகவும் முக்கியம். அதிலும் மற்ற இடங்களில் அவை படாமல் எடுக்க வேண்டியதும் அவசியமாகிறது.

மேலும், பருவை நீக்குவது என்பதை கவனமாக செய்ய வேண்டும். பருவை கைகளால் கிள்ளி எடுத்துவிடுகிறோம்.

அதில் இருந்து வெள்ளையான திரவம் வெளியான பிறகு இரத்தம் வரும். அதனை துடைத்துப் போட்டுவிட்டு அப்படியே விட்டுவிடக் கூடாது. அப்படி விட்டுவிட்டால்தான் பருக்கள் பரவுகிறது.

பருக்கள் வந்தால் அதனை நீக்கியதும் உடனடியாக அதனை சுத்தப்படுத்திவிட்டு அதில் ஏதாவது ஒரு பேஸ் பேக்கை போட வேண்டும்.

அப்படி போடா விட்டால், பருவில் ஏற்பட்ட துளைக்குகள் தூசு, துகள்கள் போய் பெரிய பிரச்சினையாகி விடும்.

முகப்பரு வந்தவர்கள் அதிலும், அதிகமாக முகப்பருவினால் பாதிக்கப்படுபவர்கள் தங்களது முகத்தை நல்ல முறையில் பராமக்க வேண்டும்.

பருக்கள் வருபவர்கள் எந்த விதமான க்ரிம்களையும் பயன்படுத்தக் கூடாது. சிலரது முகத்தில் விரலைக் கூட வைக்க முடியாது.

அந்த அளவிற்கு வலி எடுக்கும். அவர்கள் அழகுக் கலை நிபுணரிடம் செல்வதை விட, ஒரு தோல் மருத்துவடம் செல்வதுதான் நல்லது.

அழகுக் கலை நிபுணரால் எல்லாமே செய்ய முடியாது.

எனவே, அவர்களுக்கு அடிப்படையில் என்ன பிரச்சினை இருக்கிறது என்பதை மருத்துவர் முலம் அறிந்து கொண்டு அதற்கு முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

பருவை மட்டும் நீக்கி விட்டாலும், உள்ளுக்குள் இருந்து சீழ் போன்ற ஒன்று வந்து கொண்டே இருக்கும்.

அதனை எவ்வளவுதான் எடுக்க முடியும். ஒரு வேளை அது சருமத்திற்கு அடியிலேயே தங்கிவிட்டாலும் பிரச்சினையா கிவிடும்.

அதிகமாக எடுத்தாலும் பரு இருந்த இடத்தில் வடு ஏற்பட்டு விடும். எனவே பருவை அழகுக் கலை நிபுணரிடம் சென்று நீக்கிக் கொள்வதை விட, அதிகமாக பரு இருப்பவர்கள் ஒரு மருத்துவரிடம் சொல்வதுதான் நல்லது.

பருக்களினால் ஏற்பட்ட வடு நிச்சயமாக போகும்.

அதற்கு ஒரு நீண்ட சிகிச்சை உள்ளது. முதலில் பரு உள்ளவர்கள் பேஷியல் செய்து கொள்ளவே கூடாது.

ஏன் அப்படிக் கூறுகிறேன் என்றால், பரு வருகிறது என்றால் அவர்களது சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் பசை உள்ளது.

மேலும், பேஷியலின் போது பயன்படுத்தும் க்ரீம்கள் அனைத்திலும் அதிகப்படியான எண்ணெய் பசைதான் இருக்கும்.

எனவே அவரகளது சருமத்தை பேஷியல் மேலும் சிக்கலாக்கும்.

முகத்தில் அதிகமான பருக்கள் இருப்பவர்கள் அவசியமாக பேஷியல் செய்தே ஆக வேண்டும் என்று நினைத்தால் முதலில் ஒரு மருத்துவடம் ஆலோசனை பெற்று விட்டு பிறகு பேஷியல் செய்து கொள்ளலாம்.

பிளீச் செய்யலாம். ஏனெனில் ப்ளீச் செய்வதால் முகத்தில் இருக்கும் எண்ணெய் தன்மை நீக்கப்பட்டு விடும்.

எனவே ப்ளீச்சிங் செய்து கொள்ளலாம். தவறில்லை.

பயணுள்ள சில குறிப்புகள்
1.முகத்தை சோப்புப் போட்டு வெதுவெதுப்பான தண்ணீரால் அடிக்கடி கழுவுங்கள்.

2. முகத்தில் பவுடர் பூசுவதையும், அழகு சாதன களிம்புகள் உபயோகப்படுத்துவதையும் தவிருங்கள்.

3. சுத்தமான காற்றும், சூய ஒளியும் முகத்திற்கு தேவை.

4. கொழுப்பு நிறைந்த அசைவ உணவுகளையும், நெய், வெண்ணெய் கேக், ஐஸ் கிம், சொக்லெட், பாலாடை போன்றவற்றையும் ஒதுக்குங்கள்.

5. கீரை மற்றும் பச்சை காய்கறிகளை நிறைய சாப்பிடுங்கள்.

6. தினம் இரண்டு லிட்டருக்கு குறையாமல் தண்ணீர் குடியுங்கள்.

7. மலச்சிக்கல் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

8. பருக்களை கிள்ளுவதோ, அதனுள் இருக்கும் ரவை போன்ற பொருளை வெளியேற்ற அழுத்துவதோ கூடாது.

9. பருக்களில் சீழ் வைத்தால் டெட்ராசைக்ளின் மாத்திரைகளை மருத்துவர் பந்துரைக்கும் கால அளவுக்கு தொடர்ந்து சாப்பிடுங்கள்.

10. பருக்களின் மேல் பூசுவதற்கு பலவித களிம்புகள் கிடைக்கின்றன. அவற்றை தேர்வு செய்வதற்கு மருத்துவரின் உதவியை நாடுங்கள்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply