முகத்தில் உள்ள முகப்பரு தழும்பு மறைய சில எளிய வழி முறைகள்…!

Loading...

முகத்தில் உள்ள முகப்பரு தழும்பு மறைய சில எளிய வழி முறைகள்…!

1 – முகப் பருவைக் கிள்ளுவதால் ஏற்படும் கரும்புள்ளியைப் போக்க :

ஜாதிக்காய் ஒன்றை எடுத்து தேங்காய்ப்பால் சிறிது விட்டு அரைத்து இரவில் கரும் புள்ளியின் மேல் போட்டு வரவும் .
தினமும் இது போல் செய்து வர சில நாட்களில் கரும் புள்ளி மறைந்து விடும்.



2 – முகப்பரு – கரும் புள்ளி -தழும்புகள் நீங்க :

கோபி சந்தனம் – ஒரு டீ ஸ்பூன் அளவு
பாதாம் பருப்பு – மூன்று (நீரில் ஊற வைத்தது)
தயிர் – 2 – டீ ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 2 – டீ ஸ்பூன்
இவைகளை அரைத்து எடுத்து முகம், கழுத்து பகுதிகளில் பூசி ஒருமணி நேரம் கழித்து கழுவவும்.இரண்டு நாட்களுக்கு ஒரு முறை செய்து வர முகப்பரு ,கரும்புள்ளி ,தழும்புகள் நீங்கி முகம் அழகுபெரும்.



3 -முகத்தில் தழும்புகள் – தீப்புண் தழும்புகள் மறைய :

அரச மர பழுப்பு இலைகளை சேகரித்து எரித்து கரியாக்கி தூள் செய்து தேங்கா எண்ணையில் விட்டு குழப்பி வைத்துக் கொள்ளவும். இதனை இரவில் தழும்பு உள்ள இடங்களில் தடவி வர தழும்புகள் படிப்படியாக மறையும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply