மிளகு வடை

Loading...

மிளகு வடை

தேவையானவை:
வெள்ளை உளுத்தம்பருப்பு – ஒரு கப், மிளகு – ஒரு டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.


செய்முறை:
கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்து, மெஷினில் ரவை போல உடைத்து வாங்கவும் (மிக்ஸியிலும் அரைக்கலாம்). இதுதான் மிளகு வடை ரெடி மிக்ஸ்.

வடை தேவைப்படும்போது, இந்த ரெடி மிக்ஸை தண்ணீர் தெளித்து நன்கு கலந்து பிசிறி, 15, 20 நிமிடம் ஊற வைக்கவும். கொஞ்சம் கலவையை எடுத்து உருட்டினாற் போல செய்து எண்ணெய் தொட்டுக் கொண்டு, பிளாஸ்டிக் ஷீட் அல்லது ஈர வெள்ளை துணியில் வடையாக தட்டவும் (நடுவில் ஓட்டை போடலாம்). சூடான எண்ணெயில் வடைகளை போட்டு வேகவிட்டு, பொன்னிறம் ஆனதும் திருப்பி விட்டு, வெந்ததும் எண்ணெய் வடித்து எடுக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply