மிளகு மட்டன் கிரேவி

Loading...

மிளகு மட்டன் கிரேவி
தேவையான பொருள்கள்:

மட்டன் – ஒரு கிலோ
வறுத்து பொடிக்க:
மிளகு ‍ – 4 ஸ்பூன்
சீரகம் ‍- 2 ஸ்பூன்
சோம்பு ‍ – 1 ஸ்பூன்
பட்டை ‍ ,கிராம்பு ‍,ஏலம் ‍ – தேவையான அளவு


தாளிக்க‌:

வெங்காயம் ‍ – 4
தக்காளி ‍ – 3
இஞ்சி பூண்டு பேஸ்ட் ‍ – 2 ஸ்பூன்
உப்பு – தே.அளவு
மிளகாய் தூள் – ‍ அரை 4 ஸ்பூன்
தனியாத்தூள் ‍ – 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
எண்ணை ‍ – தேவையான அளவு
பச்ச மிளகாய் ‍ – 2


செய்முறை:

மட்டனை நன்கு கழுவி கொள்ளவும்
குக்கரில் எண்ணை விட்டு காய்ந்ததும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கி தக்காளி ,பச்சமிளகாய்,உப்பு, மல்லி கீரை போட்டு வத்க்கவும்.
மிளக்காய் தூள்,மஞ்சதூள், தனியாதூள் சேர்த்து வதக்கி மட்டனை சேர்த்து நல்ல கிளறி பொடித்து வைத்துள்ள் பொடியை சேர்த்து ந்ன்கு கிளறவும்.
2 டம்ளர் தண்ணீர் வீட்டு மூன்று விசில் விட்டு இரக்கவும்.
இரண்டு பத்தை தேங்காய் அரைத்து ஊற்றி கொதிக்கவிட்டு இரக்கவும் .

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply