மில்க் கேக்

Loading...

மில்க் கேக்
தேவையானவை:
பால் – ஒரு லிட்டர், எலுமிச்சைச் சாறு – 3 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், வெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், பிஸ்தா பருப்பு துண்டுகள் – 2 டேபிள்ஸ்பூன், சர்க்கரை – அரை கப்.


செய்முறை:
முதலில் பாலை காய்ச்சவும். 3-ல் இரண்டு பாகமாக குறுகியதும், எலுமிச்சைச் சாறு விட்டு கலக்கவும். பால் திரிந்து தண்ணீர் பிரிந்து வரும். தண்ணீரை வடிகட்டி எடுத்துவிடவும். இதுதான் பனீர். இந்த பனீரை கடாயில் போடவும். சர்க்கரை சேர்த்துக் கிளறவும். சேர்ந்து வரும்போது, வெண்ணெயைப் போட்டு அடிபிடிக்காது கிளறவும். கெட்டியாக வரும்போது ஏலக்காய்த்தூள், பிஸ்தா பருப்பு தூவிக் கலந்து, நெய் தடவிய தட்டில் பரவலாக போட்டு தட்டவும். ஆறியதும் துண்டுகள் போடவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply