மில்க் குலோப் ஜாமூன்

Loading...

மில்க் குலோப் ஜாமூன்
தேவையானவை:
பால் – ஒரு லிட்டர், மைதா – 4 டீஸ்பூன், சர்க்கரை – 2 கப், ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன், எண் ணெய் – தேவையான அளவு, ஆப்பசோடா – ஒரு சிட்டிகை.

செய்முறை:
அடிகனமான கடாயில் பாலை விட்டு சுண்டக் காய்ச்சவும். பால் இறுகி, சர்க்கரை இல்லாத கோவா போல கிடைக்கும். ஆறியதும் இந்த கோவாவுடன் மைதா, ஆப்பசோடா, ஏலக்காய்த்தூள் கலந்து பிசைந்து, சிறுசிறு உருண்டைகளாக செய்யவும். கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் 4, 5, உருண்டைகளாக போட்டு, வெந்து வந்ததும் திருப்பிவிடவும். மீண்டும் பொன்னிறமாக வெந்ததும் எண்ணெயை வடித்து எடுக்கவும். ஊசியால் மெதுவாக குத்திவிடவும். இப்போது ஜாமூன் தயார்.

ஒரு பாத்திரத்தில் சர்க்கரையைப் போட்டு, அதில் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். சர்க்கரை கரைந்து கொழகொழப்பான பதம் வந்ததும் இறக்கி, பொரித்து வைத்துள்ள ஜாமூன்களை போட்டு, 30 நிமிடம் ஊறவிட்டால்… குலாப் ஜாமூன் ரெடி.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply