மழையா..வைப்பர் வசதி கொண்ட ஹெல்மெட் இருக்கே…

Loading...

மழையா… ..வைப்பர் வசதி கொண்ட ஹெல்மெட் இருக்கே…வாகனங்களின் வைன்ட்ஷீல்டில் வைப்பர் பொருத்தப்பட்டுள்ளது போன்று, வைப்பர் பொருத்தப்பட்ட ஹெல்மெட்டை தாய்வான் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

மழைக் காலங்களில் இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிந்து செல்வோர் சாலையை சரியாக கணித்து ஓட்ட இயலாது.

இதனால், விபத்தில் சிக்கும் நிலையும் ஏற்படுகிறது. இதை தவிர்க்கும் வகையில் வைப்பர் கொண்ட புதிய ஹெல்மெட்டை ஹெய்ஹோ நிறுவனம் தயாரித்துள்ளது.

ஹெல்மெட்டின் முன்பக்க கண்ணாடியில் வைப்பர் பிளேடு பொருத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த வைப்பரை இயக்குவதற்கு பேட்டரியில் இயங்கும் மோட்டாரும் பொருத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம், மழைக்காலங்களில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் பாதுகாப்பாக செல்ல முடியும் என்று ஹெய்ஹோ தெரிவித்துள்ளது.

ரூ.2,000 விலையில் இந்த புதிய ஹெல்மெட் விற்பனை செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply