மன இறுக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் குறுகிய காலத்தில் இறக்கும் அபாயம்

Loading...

மன இறுக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் குறுகிய காலத்தில் இறக்கும் அபாயம்தற்போதுள்ள இயந்திர உலகில் மனிதர்களை பெருமளவில் இலகுவாக பாதிக்கும் நோயாக மன இறுக்கம் காணப்படுகின்றது.
இவ்வாறு மன இறுக்க நோயினால் பாதிக்கப்படுபவர்கள் ஏனைய சராசரி மனிதர்களின் ஆயுட்காலத்தினை விடவும் குறைந்த வருடங்களிலேயே இறக்கும் அபாயம் காணப்படுவதாக ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.

அதாவது இந் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் கை-கால் வலிப்பு, தற்கொலை என்பவற்றின் ஊடாக மரணத்தை விரைவாக தேடிக்கொள்வதாகவும், இவர்கள் சராசரியாக 16 வருடங்களுக்கு முன்னரே இறக்க நேரிடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பிரித்தானியாவில் மட்டும் மொத்த சனத்தொகையில் 1 சதவீதத்தினர் (700,000 பேர்) இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading...
Rates : 0
VTST BN