மன அழுத்தமா இந்த உணவுகளை சாப்பிடுங்கள்

Loading...

மன அழுத்தமா இந்த உணவுகளை சாப்பிடுங்கள்இந்த நவீன உலகில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்கு ஈடுகொடுத்து நாமும் உழைக்க வேண்டியுள்ளது.
இதனால் உடல் அளவில் பல பிரச்சனைகள் மற்றும் மன அழுத்தம் போன்றவற்றிக்கு ஆளாகிறோம், இதற்கு நாம் அதனை சரிசெய்வதற்கேற்ப உணவுகளை எடுத்துக்கொண்டால் எவ்வித பிரச்சனையும் இருக்காது.


பச்சைக் காய்கறிகள்

பச்சை நிறக் காய்கறிகளும்.. கீரை வகைகள், ப்ராக்கோலி, அவகேடா, வெண்டை ஆகியவற்றில் அதிகமாக ஃபோலிக் ஆசிட் (விட்டமின் பி9) இருக்கிறது. இது மூளையை புத்துணர்ச்சியாக வைத்து உற்சாகமாகச் செயல்பட உதவுகிறது.

நீங்கள் முன்கோபம் கொண்டவர் என்றால் உங்களது டென்ஷனை குறைக்க இவை உதவும்.


சொக்லேட்ஸ்

சொக்லேட்களில் ”ட்ரைப்டோஃபன்” அதிகம் உள்ளது. இது உங்களுக்கு நல்ல உற்சாகத்தை தரும். நாம் நலமாக மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்பதை உணர உதவுவது சொரட்டோடின் என்ற ஒரு வகை ஹார்மோன் தான்.

அதனை அதிகப்படுத்த உதவுவது இந்த ‘ட்ரைப்டோஃபன்” ! இவை வாழைப்பழம், முட்டை இவற்றிலும் அதிகம் உள்ளது. மேலும் இவைகளை உண்ணும்போது உங்களுக்கு நிம்மதியான தூக்கமும் கிடைக்கும்.


தயிர்

சிலர் செரிமானப் பிரச்னைகளாலே மிகவும் சோர்வாக இருப்பார்கள். தயிரில் ”ப்ரோபயோட்டிக்” என்று சொல்லப்படும் நல்ல பாக்டீரியா உள்ளது. இது நல்ல செரிமானத்திற்கு உதவுகிறது.

மேலும் சின்ன விடயத்திற்குக்கூட அதிகமாக உணர்ச்சிவசப்படக்கூடிய நபர்களுக்கு தினமும் உணவில் தயிரை சேர்த்துவர இந்த பிரச்சனை குறையும்.


ஒமேகா – 3

பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் மன அழுத்தத்தைப் போக்க இந்த ஒமேகா – 3 உதவுகிறது. காரணம் தெரியாமல் ஏற்படும் எரிச்சல், கோபத்தை கட்டுப்படுத்த உதவும்.

ஒமேகா-3 குறைபாடு ஏற்பட்டால் இதயவியாதி, நினைவுத்திறன் குறைபாடு, பைபோலார் எனப்படும் நரம்புத்தளர்ச்சி நோய் போன்ற பல பாதிப்புகள் ஏற்படும்.

எனவே ஒமேகா 3 நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply