மனிதர்களுக்கு தோல் அழற்சியை ஏற்படுத்தும் புதிய வைரஸ்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Loading...

மனிதர்களுக்கு தோல் அழற்சியை ஏற்படுத்தும் புதிய வைரஸ்  விஞ்ஞானிகள் எச்சரிக்கைஅண்மைக்காலமாக மனிதர்களுக்கு பாரிய தீங்கு விளைவிக்கக்கூடிய வைரஸ் தாக்கங்கள் அதிகரித்துள்ளமை அனைவரும் அறிந்ததே.
இவற்றில் 2014ம் ஆண்டு ஆபிரிக்க நாடுகளில் பரவிய எபோலா மற்றும் அண்மையில் பரபரப்பை ஏற்படுத்திய ஸிகா வைரஸ் என்பவற்றினை குறிப்பிடலாம்.

இப் பாதிப்புக்களிலிருந்து முழுமையாக விடுபடுவதற்கு முன்னர் தற்போது மனிதர்களில் தோல் அழற்சியை ஏற்படுத்தக்கூடிய வைரஸ் ஒன்று வௌவால்களில் இருந்து பரவுவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

Gammaherpesvirus 8 (BGHV8) என அழைக்கப்படும் இந்த வைரஸ் தாக்கத்திற்குரிய எதிர்ப்பு சக்தி மனிதர்களில் மிகவும் குறைவாக காணப்படுவதனால் மனித கலங்களில் உட்புகுந்து 18 மணி நேரத்தின் பின் தோல் அழற்சியை ஏற்படுத்துவதாக குறித்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை எபோலா வைரஸும் வௌவால் போன்ற பாலூட்டி விலங்குகளாலேயே பரப்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply