மனநிலைக்கு ஏற்ப பாடலை தர வந்துவிட்டது சாங்ஸா அப்ளிக்கேஷன்…

Loading...

மனநிலைக்கு ஏற்ப பாடலை தர வந்துவிட்டது சாங்ஸா அப்ளிக்கேஷன்…நம்முடைய மனநிலைக்கு ஏற்ற வகையில் பாடல்களை ஓடச் செய்யும் அப்ளிக்கெஷனை ஐபேட்டில் பார்க்கலாம்.

சாங்ஸா என்ற இன்டர்நெட் ரேடியோ சேவை, இந்த புதிய சாங்ஸா அப்ளிக்கேஷனை கடந்த மாதத்திலேயே அறிமுகம் செய்தது. இந்த அப்ளிக்கேஷன் இன்று மனிதர்கள் ஒவ்வொரு நேரம் ஒவ்வொரு மனோநிலையில் இருப்பதற்கு ஏற்ற பாடல்களை வழங்குகிறது.

எப்போதும் வேலை வேலை என்று இருப்பவர்கள் சனி, ஞாயிறு வருவதற்காக காத்து கொண்டிருப்பார்கள். இதனால் இந்த அப்ளிக்கேஷனை தங்களது விருப்பமான ஐபேடில் டவுன்லோட் செய்து கொண்டால், மன‌நிலைக்கு தகுந்த வகையில் பாடல்களை இந்த அப்ளிக்கேஷன் ப்ளே செய்யும். இது ரிலாக்ஸ் செய்து கொள்வதற்கு ஒரு புதிய வழி.

எல்லோருடைய வாழ்விலும் இசை ஒரு பெரிய பங்களிப்பினை பெறுகிறது. நண்பர்களுடன் கொண்டாடும் பார்டி தொடங்கி கல்யாணம், விருந்தினர் வருகை என்று எல்லா இடங்களிலும் சந்தோஷத்தினை வெளிப்படுத்தும் விதமாக பாடல்கள் ஒரு முக்கியத்துவத்தினை பெறுகிறது.

காலை, மதியம், மாலை, இரவு என்று நேரத்திற்கு தகுந்த வகையில் பாடல்களை செட் செய்வதாகவும் இருக்கும். விளையாட்டு, தொழில் நுட்பங்களை வழங்கும் அப்ளிக்கேஷன்களுக்கு மத்தியில் இந்த சாங்ஸா அப்ளிக்கேஷன் ஒரு வித்தியாசமானதாக இருக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply