மதுரை அயிரை மீன் குழம்பு

Loading...

மதுரை அயிரை மீன் குழம்பு
தேவையான பொருட்கள்

அயிரை மீன் – கால் கிலோ
சின்ன வெங்காயம் 150 கிராம்
தக்காளி – 2
பூண்டு- 10 பல்
பச்சை மிளகாய் -3
கருவேப்பிலை,கொத்தமல்லி இலை – சிறிதளவு
நல்லெ எண்ணெய்- ‍4 ஸ்பூன்
கடுகு,- தாளிக்க
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
மிளகாய்த்தூள்‍ 1 ஸ்பூன்
மல்லி தூள்- ‍ 2 ஸ்பூன்
உப்பு – தேவைக்கு.
புளி- சிறிய எலுமிச்சை அளவு
அரைத்த தேங்காய் – 5 ஸ்பூன்


செய்முறை

அயிரை மீனை கல் உப்பு போட்டு நன்றாக மூன்று நான்கு முறை தண்ணீர் விட்டு கழுவ வேண்டும்.
அயிரை மீனில் மண் அதிகம் இருக்கும் அதனால் மண் போக நன்கு கழுவ வேண்டும்.
பின்பு ஒரு கடா யில் எண்ணெய் விட்டு, கடுகு, , கருவேப்பிலை, பூண்டு, வெங்காயம் தாளித்து, வதங்கியவுடன், தக்காளி,சேர்க்க வேண்டும்.
தக்காளி மசிந்தவுடன், மிளகாய்த்தூள், மசாலாத்தூள் சேர்க்க வேண்டும். புளித்தண்ணீர் விட வேண்டும்.
அதனுடன் அரைத்த தேங்காய் தேவையான அளவு உ்பு சேர்த்து நன்கு கொதிக்க வைத்து குழம்பு ஒரளவுக்கு கெட்டியானவுடன் மீனை போட வேண்டும்,
பின்பு 5 நிமிடம் கழித்து குழம்பை இறக்கி வைத்து அதில் சிறிதளவு கருவேப்பிலை,கொத்தமல்லி இலை போட்டு மூடி வைக்கவும். சுவையான அயிரை மீன் குழம்பு ரெடி

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply