மசால் வடை

Loading...

மசால் வடை
தேவையானவை:
கடலைப் பருப்பு – ஒரு கப், ஜவ்வரிசி – 2 டீஸ்பூன், மிளகாய் வற்றல் – 4, காய்ந்த கறிவேப்பிலை – சிறிதளவு, சோம்பு – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
கடலைப்பருப்புடன் ஜவ்வரிசியை சேர்த்து சன்ன ரவையாக உடைத்துக் கொள்ளவும். மிளகாய் வற்றல், உப்பு இரண்டையும் சேர்த்துப் பொடித்து கடலைப்பருப்பு கலவையில் கலக்கவும். காய்ந்த கறிவேப்பிலையை கையினால் நொறுக்கி சேர்க்கவும். இதில் சோம்பை சேர்த்துக் கலந்தால்… மசால் வடை ரெடி மிக்ஸ் தயார்.

மசால் வடை தேவைப்படும்போது… தேவையான அளவு ரெடி மிக்ஸ் எடுத்துக் கொண்டு, அதில் தண்ணீர் தெளித்து 10 நிமிடம் ஊற வைக்கவும். நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காய துண்டுகளை தேவையான அளவு கலந்து பிசைந்து கொள்ளவும். இந்தக் கலவையில் சிறிது சிறிதாக எடுத்து, வடையாக தட்டி, சூடான எண்ணெயில் போட்டு, வெந்ததும் திருப்பி விடவும். பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply