மசாலா மோர்

Loading...

மசாலா மோர்
தேவையானவை:
கெட்டித் தயிர் – ஒரு கப், மிகப் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் – அரை கப், சீரகம் – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி – தேவையான அளவு, தண்ணீர் – 5 கப், பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை, உப்பு – சிறிதளவு.


செய்முறை:
கெட்டித் தயிரை நன்றாகக் கடைந்து உப்பு, தண்ணீர் சேர்த்து மோராக்கவும். இதில் பெருங்காயத்தூள், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்க்கவும். சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி மூன்றையும் மிக்ஸியில் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு விழுதாக அரைத்து, மோரில் சேர்த்து நன்றாக ஆற்றி வைக்கவும்.
தாகத்தை தணிக்கும், உடல் சூட்டை தவிர்க்க உதவும் அருமருந்து இது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply