மசாலா பால்

Loading...

மசாலா பால்
தேவையானவை:
பால் – 500 மில்லி, சர்க்கரை – 50 கிராம், பாதாம், முந்திரி, பிஸ்தா – தலா 10, குங்குமப்பூ – 4 இதழ்கள், ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை.


செய்முறை:
பாதாம் பருப்பை வெந்நீரில் ஊறப் போட்டு, தோல் நீக்கவும். பாதாம், முந்திரி, பிஸ்தா… இவற்றை சிறிதளவு பால் விட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும். பாலை சூடாக்கி, பொங்கி வந்ததும் அரைத்த விழுது, சர்க்கரை சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிடவும். இதனுடன் ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ சேர்த்துக் கலந்து தீயை நிறுத்தி, ஒரு தட்டு போட்டு மூடி வைக்கவும். இந்த மசாலா பாலை மிதமான சூட்டுடன் பரிமாறலாம். நன்கு ஆற வைத்து, ஃப்ரிட்ஜில் குளிர வைத்தும் பரிமாறலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply