மக்காச்சோள பர்ஃபி

Loading...

மக்காச்சோள பர்ஃபி
தேவையானவை:
பச்சை மக்காச் சோளம் – 2 கப், பால் – 8 கப், நெய் – 2 டீஸ்பூன், கசகசா – 2 டீஸ்பூன், சர்க்கரை – ஒரு கப், முந்திரி – 10, உலர்ந்த திராட்சை – 10.

செய்முறை:
வாணலியில் நெய் விட்டு, காய்ந்ததும் மக்காச்சோளத்தை வறுத்து எடுத்துக் கொள்ளவும். பாலில் சர்க்கரை சேர்த்து சூடாக்கி, சுண்டவிடவும். மக்காச்சோளத்தை மிக்ஸியில் அரைத்து அதனுடன் சேர்த்துக் கிளறவும். பிறகு கசகசா, முந்திரிப்பருப்பு, உலர்திராட்சை சேர்த்து மேலும் கிளறி இறக்கவும். ஒரு தட்டில் நெய் தடவி, அதில் இந்தக் கலவையைக் கொட்டி கரண்டியால் சமன் செய்யவும். ஆறிய பிறகு, கத்தி அல்லது தோசைத் திருப்பியால் விருப்பமான வடிவத்தில் துண்டுகள் போட்டு எடுத்து வைக்கவும். இது… பண்டிகை, விருந்து போன்ற விசேஷங்களுக்கு ஏற்றது.

.

மக்காச்சோள பர்பி:
நெய்யில் வறுத்த மைதா சிறிதளவு சேர்த்து தயாரித்தால், இன்னும் அசத்தலான ருசி கிடைக்கும்.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply