பொன்னாங்கண்ணிக் கீரை பொரிச்ச குழம்பு

Loading...

பொன்னாங்கண்ணிக் கீரை பொரிச்ச குழம்பு
தேவையானவை:
பொன்னாங்கண்ணிக் கீரை – ஒரு கட்டு, துவரம்பருப்பு – அரை ஆழாக்கு, தக்காளி – 3, மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, உப்பு – ருசிக்கேற்ப. அரைக்க: தேங்காய் கால் மூடி, சீரகம் – ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – 3 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3. தாளிக்க: நெய் – ஒரு டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன்.

செய்முறை:
பொன்னாங்கண்ணிக் கீரையைக் கழுவி, பொடியாக நறுக்கவும். துவரம்பருப்புடன் தக்காளியைச் சேர்த்து வேகவைக்கவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை வெறும் கடாயில் வாசனை வரும் வரை வறுத்து அரைத்துக்கொள்ளவும். வெந்த பருப்புடன் கீரையைச் சேர்த்து, மஞ்சள்தூள் போட்டு வேகவைக்கவும். கீரை வெந்ததும், அரைத்து வைத்திருக்கும் விழுதைக் கரைத்து ஊற்றவும். ஒரு கொதி வந்ததும், உப்பு சேர்த்து இறக்கி, நெய்யில் கடுகு, சீரகம் தாளித்துக் கொட்டவும்.

பலன்கள்:
கண் பார்வைத் திறனை மேம்படுத்தும். தசை எலும்பு வலுப்படும். ரத்தசோகை நீங்கும். இதயநோயைத் தடுக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply