பொடுகைப் போக்கும் பேக்கிங் சோடா

Loading...

பொடுகைப் போக்கும் பேக்கிங் சோடாதலையில் முடி அதிகம் கொட்­டு­வ­தற்கு ஒரு் கார­ண­மாக இருப்­பது பொடுகு தான்.

தற்­போது மாசு நிறைந்த சுற்­றுச்­சூ­ழலால் தலையில் அழுக்­குகள் அதிகம் சேர்ந்து, பொடு­கு­க­ளாக மாறு­கின்­றன. இப்­படி பொடு­குகள் அதி­க­ரிப்­பதால், மயிரக்­கால்கள் வலு­வி­ழந்து உதிர ஆரம்­பிக்­கின்­றன. இந்­நி­லையைத் தடுக்கப் பல வழிகள் உள்­ளன. அதில் ஒன்று தான் பேக்கிங் சோடா. அது­மட்­டு­மின்றி, பேக்கிங் சோடா முடியை வலி­மை­யாக்­கு­வ­தோடு, முடியின் நிறத்­தையும் பாது­காக்கும்.

சரி, இப்­போது பேக்கிங் சோடாவை எப்­படி தலைக்குப் பயன்­ப­டுத்­து­வது என்று பார்ப்போம்.

படி: 1 முதலில் தலையை வெது­வெ­துப்­பான நீரினால் நன்கு அலச வேண்டும். குறிப்­பாக ஷாம்போ , கண்­டி­ஷனர் எதையும் பயன்­ப­டுத்தக் கூடாது.

பேக்கிங் சோடாவை நீரில் கலந்து பேஸ்ட் செய்து, அதனை ஸ்கால்ப்பில் படும் படி நன்கு தடவி 3 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

இதனால் பேக்கிங் சோடாவில் உள்ள pH பொடு­கு­களை உண்­டாக்கும் கிரு­மி­களை அழித்து வெளி­யேற்­றி­விடும்

பின் வெது­வெ­துப்­பான நீரில் தலையை நன்கு அலச வேண்டும். பேக்கிங் சோடா பொடு­கு­களை மட்­டு­மின்றி, தலையில் உள்ள அதி­கப்­ப­டி­யான எண்ணெய்ப் பசை­யையும் நீக்­கி­விடும்.

குறிப்பு உங்­க­ளுக்கு பொடுகுத் தொல்லை அதிகம் இருந்தால், வாரம் இரண்டு முறை இச்­செ­யலை மேற்­கொள்ள வேண்டும். தினமும் பயன்­ப­டுத்­தினால் தலையில் எண்ணெய்ப் பசை முற்­றிலும் நீங்கி, பின் அதுவே பொடுகை அதி­க­ரித்­து­விடும்.

எனவே வாரத்­திற்கு 2 தட­வைக்கு மேல் மேற்­கொள்ள வேண்டாம்.

மென்­மை­யான முடி முக்­கி­ய­மாக பேக்கிங் சோடா பொடுகை நீக்­கி­வி­டு­வ­தோடு, முடி­யையும் பட்­டுப்­போன்று மென்­மை­யாக்­கி­வி­டு­வ­துடன், ஆரோக்­கி­ய­மா­கவும் வைத்துக் கொள்ள உதவும்

ஹெயர் ட்ரையர் கூடாது தலைக்கு குளித்த பின்னர் முடியை உலர்த்த ஹெயர் ட்ரையர் பயன்­ப­டுத்­து­வதைத் தவிர்த்து,

இயற்­கை­யான முறையில் முடியை உலர்த்­துங்கள். இல்­லா­விட்டால், முடியின் ஆரோக்கியம் பாழாவதோடு, மயிர்க் கால்களும் அதிலிருந்து வெளிவரும் வெப் பத்தினால் வலுவிழந்து உதிர ஆரம்பிக்கும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply