பொது நிற சருமம் கொண்டவரா நீங்கள்…? :ஆரோக்கியமான சருமம் என்றால் அது கறுத்த சருமம்தான்….! : அதனை பாதுகாக்க சில வழிகள்

Loading...

பொது நிற சருமம் கொண்டவரா நீங்கள்..கறுத்த சருமம் கொண்ட எல்லா பெண்களுக்கும் உள்ளூர ஒருவித தாழ்வு மனப்பான்மை கட்டாயம் இருக்கும்.

கறுப்பாக இருக்கிறோமே என சோர்ந்து போயிருக்கும் பெண்களுக்கு ஒரு விஷயம். ஆரோக்கியமான சருமம் என்றால் அது கறுத்த சருமம்தான். அதில் முதுமையும், சருமப் பிரச்சினைகளும் அத்தனை சீக்கிரம் வருவதில்லை.

அழகைப் பொறுத்தவரை அவர்கள் பேரழகியாகவே இருந்தால் கூட அது இரண்டாம் பட்சம்தான்.

கறுப்பான பெண்கள் நிறமாக மாற, சில அழகு சிகிச்கைகள்.

பியூட்டி பார்லர் போகாமல் வீட்டிலேயே இவர்கள் செய்து கொள்ளக்கூடிய சிகிச்சைகள் சில


பழ பேஷியல்

முகத்தை முதலில் காய்ச்சாத பாலால் துடைக்கவும். சிறிதளவு வெள்ளரிச்சாறு அல்லது ஸ்ட்ராபெர்ரி சாறு எடுத்து சில நிமிடங்கள் ப்ரீசரில் வைத்து, அதில் பஞ்சை நனைத்து முகத்தில் ஒற்றியெடுக்கவும். நன்கு கனிந்த பப்பாளியை மசித்து எடுத்துக் கொள்ளவும்.

அதை வைத்து முகத்துக்கு மென்மையாக மசாஜ் கொடுக்கவும். மசாஜ் செய்கிறபோது கைகளை ஆரஞ்சு சாற்றில் நனைத்துக் கொள்ளவும். கொஞ்சம் பப்பாளிக் கூழ், இரண்டு துளிகள் தேன், கொஞ்சம் பால் எல்லாம் சேர்த்து கடைசியாக முகத்துக்குப் பேக் போடவும்.


இவர்கள் எப்படி மேக்கப் போடலாம்?

கறுப்பான பெண்கள் பளிச்செனக் காட்சியளித்தால் போதும் என நினைக்க வேண்டுமே தவிர, வெள்ளையாகத் தெரிய வேண்டும் என நினைக்கக் கூடாது.

அவர்களது சருமம் மஞ்சள், பிரவுன் அல்லது பிங்க் என எந்த மாதிரியான ஸ்கின் டோன் கொண்டது எனப் பார்த்து அதற்கேற்ற பவுண்டேஷனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பவுண்டேஷனை மணிக்கட்டில் தடவிப் பார்த்து அது சரியாகப் பொருந்துகிறதா எனத் தெரிந்து உபயோகிக்கலாம்.

ஐ ஷேடோ, லிப்ஸ்டிக் போன்றவை ரொம்பவும் வெளிர் நிறமாகவும் இல்லாமல், ரொம்பவும் டார்க் நிறமாகவும் இல்லாமல் மீடியம் ஷேடில் இருக்கட்டும். லிப்ஸ்டிக் போடுகிற நிறத்திலேயே ஐ ஷேடோவும் இருக்கட்டும்.

கறுப்பான பெண்கள் வெள்ளை நிறப்பவுடர் உபயோகிப்பதைத் தவிர்த்து, லூஸ் பவுடர் உபயோகிக்கலாம்.

உடை அணிகிற விஷயத்தில் இவர்கள் அதிக அக்கறை காட்ட வேண்டும். பளீர் நிற உடைகள் அப்படியே முகத்தில் பிரதிபலிக்கும்.

அதே சமயம் டார்க் நிற உடைகளும் அப்படியே உடலின் நிறத்தோடு ஒன்றிப் போய் இன்னும் கருப்பாகக் காட்டும்.

வெள்ளை மற்றும் ரொம்பவும் வெளிர் நிறங்களைத் தவிர்த்து கிரீம், டார்க் பிங்க், ஆரஞ்சு, நீலம், பச்சை, மெஜந்தா பிங்க் போன்ற நிறங்களில் உடை அணியலாம்.


கண்:

கண்ணைச் சுற்றி உள்ள கருவளையம் நீங்க வெள்ளரிக்காய் ஜூஸை பஞ்சில் நனைத்து கண்கள் மீது தினமும் போட்டு வரவும்.


உதடு:
உதடு வசீகரமாக இருக்க முட்டையின் வெண்கரு, பாதாம் பவுடர், பால் இம் மூன்றையும் கலந்து உதட்டில் தடவி அது காய்ந்ததும் சுடுநீரில் கழுவி எடுக்க வேண்டும்.


முகத்தின் எண்ணைப் பசை நீங்க:
முட்டையின் வெண்கரு 7 ஸ்பூன், தேன் கால் ஸ்பூன், மாதுளை ஜூஸ் அரை ஸ்பூன் மூன்றையும் கலந்து அரை மணி நேரம் பூசிவிட்டு முகம் கழுவினால், எண்ணைப் பசை நீங்கிவிடும்.


முக வறட்சி நீங்க:
பச்சை கொத்த மல்லி அல்லது புதினாவை நன்றாக அரைத்து முகத்தில் பூசி பிறகு சிறிது நேரம் கழித்து அலம்ப வேண்டும்.


கரும்புள்ளி மறைய:

முகப்பருவால் ஏற் படும் ஜாதிக்காயை அரைத்துப் போடவும். முகப்பரு நீங்க: பூண்டு அல்லது கருந் துளசியை அரைத்துப் போட நாளடைவில் பருக்கள் மறையும்.


வாய் நாற்றம்:
புதினா கீரையைக் காய வைத்து பொடி செய்து பல் துலக்குவதால் வாய் நாற்றமின்றிப் பல் பளிச்சென்றிருக்கும்.


வெண்மையான பல்:
இரவு நேரத்தில் பச்சை கேரட்டை மென்று தின்றால் பல் உறுதியடைவதுடன், பல் வெண்மை பெறும்.


உதடு:
உதட்டில் தேங்காய் எண்ணை தடவி வந்தால் ஷைனிங்காக இருக்கும்.


கை:
பாத்திரம் தேய்ப்பதால் ஏற்படும் கை வெடிப்புகளுக்கு உருளைக்கிழங்கை வேக வைத்து பொடித்து கைகளில் தேய்த்து வந் தால் கை மிருதுவாக இருக்கும்.


நகம்:
நகங்களில் சிதைவு ஏற்படாமலும், வெண்மையாகவும் இருக்க சூரியகாந்தி எண் ணையை கை, கால் நகங்களில் தடவ வேண்டும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply