‘பென்ஸ்’ஸின் சி க்ளாஸ் பிரிமியம் செடான் கார்…

Loading...

‘பென்ஸ்’ஸின் சி க்ளாஸ் பிரிமியம் செடான் கார்…மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் விற்பனையில் முக்கிய பங்களிப்பை அளித்து வரும் அந்த நிறுவனத்தின் என்ட்ரி லெவல் செடான் கார்தான் சி-க்ளாஸ். இந்த கார் பெட்ரோல் மற்றும் டீசல் மாடலில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

நம் நாட்டு மார்க்கெட்டில் இதுவரை 15,000 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.போக்குவரத்து நெரிசலில் வெகு எளிதாக ஓட்டுவதற்கு ஏற்றதாக இருக்கிறது இந்த ஆட்டோமேட்டிக் காரின் விபரங்கள் உங்களுக்காக‌.

பார்த்தவுடன் கவரும் வகையில் சிறந்த வடிவமைப்பை பெற்றிருக்கிறது பென்ஸ் சி-க்ளாஸ். முன்பக்க கிரில் பென்ஸ் சின்னத்தின் கம்பீரத்துடன், புரொஜெக்டர் ஹெட்லைட், அதற்கு கீழே ரன்னிங் லைட் என அசத்தலாக இருக்கிறது. பின்புறத்திலும் எல்இடி டேஞ்சர் லைட்டுகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

475 லிட்டர் பூட் அறையில் அதிக பொருட்களை எடுத்து செல்ல முடியும். வெளியூர் பயணங்கள் செல்லும்போது எதையும் குறைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது. உட்புறத்தை பொறுத்தவரை பீயேஜ் வண்ணத்தில் பளிச்சிடுகிறது. லெதர் இருக்கைகள் மிக மிக சொகுசாக இருக்கின்றன. நேவிகேஷன் வசதிக்காக டிஸ்ப்ளே மற்றும் ஸ்மார்ட்போனை இணைக்க ப்ளூடூத் வசதிகள் இருக்கின்றன.

இந்த சி கிளாஸ் காரில் சிடிஐ 250 மாடலில் 2143சிசி திறன் கொண்ட டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 204 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டிருக்கிறது.

இருக்கை, ஹெட்ரெஸ்ட், ஸ்டீயரிங் என அனைத்தையும் எலக்ட்ரிக்கல் கன்ட்ரோல் சிஸ்டம் மூலம் ஒரு பட்டனை அழுத்தினாலே அட்ஜெஸ்ட் செய்ய முடியும். இதற்காக, டிரைவர் இருக்கைக்கு பக்கத்தில் இருக்கும் கதவில் பட்டன்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

ரியர் வியூ மிரர்களையும் எலக்ட்ரிக்கல் முறையில் அட்ஜெஸ்ட் செய்ய முடிகிறது. முன்பக்கத்தில் அமரும் பயணிக்கும் இதே வசதிகள் இருக்கிறது. மேற்கூரையில் இருக்கும் பட்டன் மூலம், கண்ணாடி கூரையை(சன் ரூப்) எளிதாக திறந்து மூட வசதி இருக்கிறது. கார் ஓட்டும்போது எளிதாக இயக்கும் வகையில் இவை அனைத்தும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply