புற்றுநோய் பாதிப்பை அதிகரிக்கும் குறட்டை

Loading...

புற்றுநோய் பாதிப்பை அதிகரிக்கும் குறட்டைதொடர்ச்சியான குறட்டையினால் குடும்பத்தவர்களது தூக்கம் பாதிக்கப்படும் என்று இதுவரை கேள்விப்பட்டிருப்பீர்கள்.
ஆனால் இது புற்றுநோய் பாதிப்பை அதிகமாக்கக்கூடியது எனவும் ஆய்வு ஒன்றின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதாவது குறட்டை ஆனது சுவாசத்தின்போது உள்ளெடுக்கப்படும் ஒட்சிசன் வாயுவின் அளவினைக் குறைக்கின்றது எனவும் ஒட்சிசன் உடற் கலங்களில் குறைதல் புற்றுநோய் பாதிப்பினை அதிகரிக்கின்றது எனவும் அமெரிக்க மற்றும் ஸ்பெயின் விஞ்ஞானிகள் இணைந்து மேற்கொண்ட இந்த ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.

இதேவேளை குரல் வளையில் ஏற்படும் மூச்சு திணறலினால் ஏற்படும் குறட்டையானது உடல் பருமன் அதிகரிப்பு, நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் மாரடைப்பு என்பவற்றிற்கும் காரணமாக இருக்கின்றது என முன்னைய ஆய்வுகளின் மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply