புற்றுநோய் தாக்கத்தை குறைக்கும் அஸ்பிரின்

Loading...

புற்றுநோய் தாக்கத்தை குறைக்கும் அஸ்பிரின்சம காலத்தில் மனிதர்களுக்கு சிம்ம சொற்பனமாக விளங்கும் நோய் புற்றுநோய் ஆகும்.
இந் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மரணம் உறுதி என்ற நிலையில் இந் நோயை நெருங்கவிடாமல் முன்னெச்சரிக்கையாக இருப்பதே தப்பிக்க ஒரே வழியாக காணப்படுகின்றது.

இவ்வாறான நிலையில் ஹவார்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் அஸ்பிரின் மாத்திரைக்கு புற்றுநோய் தாக்காமல் தடுக்கும் எதிர்ப்பு சக்தி இருப்பதாக கண்டுபிடித்துள்ளனர்.

136,000 பேரைக் கொண்டு 32 வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு ஆய்வுகளை அடிப்படையாக மேற்கொண்ட புதிய ஆய்விலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை இந்த அஸ்பிரின் மாத்திரையானது குடல் புற்றுநோய் தாக்கத்தை 19 சதவீதத்தினால் குறைப்பதாகவும், இரைப்பை புற்றுநோயை 15 சதவீதத்தினால் குறைப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒட்டுமொத்தமாக 3 சதவீதத்தினால் அனைத்து வகை புற்று நோய் தாக்கத்தை குறைக்கவல்ல இந்த மாத்திரையினை தொடர்ச்சியாக எடுத்துவருவதன் மூலமே பயன்பெற முடியும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply