புத்தம் புதிய அம்சங்களுடன் கூடிய CCleaner மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு

Loading...

புத்தம் புதிய அம்சங்களுடன் கூடிய CCleaner மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்குவிண்டோஸ் சிஸ்டம்களை பராமரிப்பதற்கு என்று கிடைக்கும் பல்வேறு புரோகிராம்களில் குறிப்பிடத்தக்கது சிகிளீனர்(CCleaner) ஆகும்.

கணணி செயல்படுகையில் தேவையற்ற நிலையில் குவிக்கப்படும் கோப்புகளை அகற்ற, பெரும்பாலானவர்கள் பயன்படுத்துவது சிகிளீனர் தொகுப்பாகும்.

அத்துடன் அப்ளிகேஷன் புரோகிராம்களை நிர்வகிக்கவும் இது பயனுள்ள முறையில் உதவுகிறது. பிளாஷ் ட்ரைவில் எடுத்துச் சென்று பயன்படுத்தும் வகையிலும் இது கிடைக்கிறது.

இதன் புதிய பதிப்பு சிகிளீனர் 3.0.5 அண்மையில் வெளியாகியுள்ளது. இதில் பலவகையான புதிய வசதிகள் இணைக்கப்பட்டுள்ளன.

அவற்றில் குறிப்பாக இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 மற்றும் பயர்பொக்ஸ் பதிப்பு 4க்கான சப்போர்ட்டைக் குறிப்பிடலாம். இதில் தரப்பட்டுள்ள மேலும் பல புதிய வசதிகள் இங்கு குறிப்பிடப்படுகின்றன.

மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2010 சப்போர்ட், ஐ-ட்யூன்ஸ் குக்கிகள் பராமரிப்பு, விண்டோஸ் பயர்வால் டூலின் தேவையற்ற நிபந்தனை நீக்கம், ஆப்பரா சர்ச் பீல்டில் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளுக்கான ஹிஸ்டரி நீக்கம், ரியல் பிளேயர் கிளீனிங், புதிய பிரிவுகளுக்கான “Analyze” and “Clean” வசதி, Advanced Options பிரிவில் மாறா நிலைக்குச் செல்லும்(“Restore default settings”) வசதி, கிளாசிக் மீடியா பிளேயருக்கான சப்போர்ட், பயன்படுத்தப்படாத, பழைய புரோகிராம்களுக்கான ரெஜிஸ்ட்ரி வரிகள் நீக்கம், 64 பிட் கம்ப்யூட்டர்களில் ஷார்ட்கட் கிளீனிங் ஆகிய கூடுதல் வசதிகள் தரப்பட்டுள்ளன. மேலும் சில குறைபாடுகளும் நீக்கப்பட்டுள்ளன.

இந்த புதிய பதிப்பினை நிறுவும் போது, சில புதிய வசதிகளுக்கான இன்ஸ்டலேஷனுக்கு புரோகிராம் அனுமதி கேட்கும். அதனை வழங்க வேண்டும்.

இந்த பதிப்பு 32 மற்றும் 64 பிட் விண்டோஸ் சிஸ்டத்தின் அனைத்து(விண்டோஸ் எக்ஸ்பி, விஸ்டா, விண்டோஸ் 7, விண்டோஸ் 2000 மற்றும் சார்ந்த சிஸ்டங்கள்) பதிப்புகளிலும் இயங்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply