புதிய Operating System இலுள்ள அம்சங்கள்!

Loading...

புதிய Operating System இலுள்ள அம்சங்கள்!மடிக்கணினிகள், மேசைக்கணினிகள் மற்றும் தொடுதிரைகளிற்காக மைக்ரோசொப்ற்றினால் வெளியிடப்பட்டுள்ள புதிய வின்டோஸ் 8 OS ஆனது தற்போது தனது preview version இனை எவராலும் தரவிறக்கம் செய்துகொள்ளப்படக் கூடியவாறு சற்று முன்னேற்றத்துடன் வெளியிட்டுள்ளது.

பெப்ரவரியில் மைக்ரொசொப்ற், வின்டோஸ் 8 இற்குரிய ஒரு வாடிக்கையாளர் முன்மாதிரியை வெளியிட்டிருந்தது. நேற்று இதனை 14 மொழிகளில் தரவிறக்கம் செய்யக்கூடியவாறான மாதிரியையும் வெளியிட்டது.

எனினும் இதன் முழுமையான புதிய மாதிரி எப்போது அதிகாரபுர்வமாக வெளியிடப்படுமென்று மைக்ரோசொப்ற் இதுவரையில் எந்தவிதமான கருத்துக்களையும் வெளியிடவில்லை.

“எங்களது வின்டோஸ் 8 மாதிரியும் கையடக்கக் கணினிகளுக்கான வின்டோஸ் RT உம் சரியான பயனைத் தரும் நிலைக்கு வரும்போது நாங்கள் எங்களது மாதிரிகளை வெளியிடுவோம்” என்றார் மைக்ரோசொப்ற்றின் ஸ்ரிவன் சினோஸ்கி.

வின்டோஸ் 8 இல் மின்னஞ்சல், நிழற்படங்கள் மென்பொருட்கள் என்பனவற்றில் முன்னேற்றங்கள் இருக்குமென்றும் பயணம், செய்திகள் மற்றும் விளையாட்டுக்களிற்கான Bing மென்பொருட்களையும் மைக்ரோசொப்ற் இணைத்துள்ளதென்றும் கூறப்படுகின்றது.

இதில் புதிய குடும்பப் பாதுகாப்பு அமைப்பும் தனிநபர் சரிசெய்தல்களும் இணைக்கப்பட்டுள்ளது. Do Not Track என்ற தன்மைகளும் Internet Explorer 10 இல் காணப்படுகின்றது. Flash animation ஆனது desktop இலும் Metro (இது தொடுதிரைக் கணினிகளிற்காக வடிவமைக்கப்பட்டதாகும்) மாதிரிகளிலும் வேலைசெய்யக்கூடியவாறு உருவாக்கியுள்ளது.

வின்டோசின் முன்னைய அனைத்து மாதிரிகளிலிருந்தும் வின்டோஸ் 8 மாறுபட்டதாக இருக்கும்.

இதில் தொடுதிரை இருந்தாலும் சுட்டி மற்றும் விசைப்பலகையின் தொழிற்பாடுகளுக்கேற்றவாறும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. எனினும் இதனை எப்போது வாங்குவதென்று கூறாமல் அதன் மேம்படுத்தப்பட்ட நிகழ்ச்சிநிரல்களையே அது வெளிப்படுத்தி வருகின்றது.

ஜுன் 2 இலிருந்து வின்டோஸ் 7 ஐ வாங்கும் நபர் ஒருவர் அதனுடன் வின்டோஸ் 8 Pro இனை 14.99 டொலரிற்கு வாங்கலாமென்கின்றது இந்நிறுவனம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply