புதிய யுக்திகளோடு களமிறங்குகிறது ஒற்றை சக்கர ஸ்கூட்டர்

Loading...

புதிய யுக்திகளோடு களமிறங்குகிறது ஒற்றை சக்கர ஸ்கூட்டர்மோனோ சைக்கிள் என்றழைக்கப்படும் ஒற்றை வீல் கொண்ட மோட்டார்சைக்கிள் ஏற்கனவே நமக்கு பரிட்சயம். ஆனால், அடுத்து வரப் போகும் இந்த ஒற்றை வீல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்(யூனி சைக்கிள்) அந்த கான்செப்ட்டிலிருந்து முற்றிலும் மாறுபட்டது.

ஆம். அமெரிக்காவை சேர்ந்த போர்ட்லேண்ட் என்ற நிறுவனம் ஒற்றை சக்கரத்தில் செல்லும் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வடிவமைத்துள்ளது. சாதாரண மோட்டார்சைக்கிள் போன்றே கைப்பிடிகள் பிடித்து ஓட்டக் கூடிய இந்த புதிய ஸ்கூட்டர் செக்வே ஸ்கூட்டர்கள் போன்று தானாகவே பேலன்ஸ் செய்து கொள்ளும் தொழில்நுட்பம் கொண்டது.

லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டுள்ள இந்த எலக்ட்ரிக் பைக் ஒரு முறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 32 கிமீ வரை செல்லும். மேலும், மணிக்கு அதிகபட்சமாக 30 கிமீ வேகம் வரை செல்லலாம்.

பிரத்யேக பிரேக்கிங் சிஸ்டம் கொண்டிருக்கும் இந்த எலக்ட்ரிக் பைக் நகர்ப்புறத்தில் பெரிதும் பயன்பாடு கொண்டதாக இருக்கும். அடுத்த ஆண்டு இந்த ஒற்றை சக்கரம் கொண்ட சாகச பைக் விற்பனைக்கு வர இருக்கிறது. ரைனோ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த எலக்ட்ரிக் பைக் ரூ.2.25 லட்சம் விலையில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply