புதிய சிறப்பம்சத்துடன் வெளியான QiKU F4 ஸ்மார்ட்கைப்பேசி

Loading...

புதிய சிறப்பம்சத்துடன் வெளியான QiKU F4 ஸ்மார்ட்கைப்பேசிசீனாவில் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய QiKU F4 ஸ்மார்ட்கைப்பேசி அறமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த கைப்பேசியின் மிகப்பெரிய சிறப்பம்சமாக, இதில் 4ஜி எல்டிஇ ஆதரவு மற்றும் பின்புற ஸ்மார்ட்கைப்பேசியின் பேனலில் கைரேகை சென்சார் கொண்டுள்ளது.

டூயல் சிம் ஆதரவு கொண்ட QiKU F4 ஸ்மாட்கைப்பேசி, ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப் மூலம் இயங்குகிறது.

QiKU F4 ஸ்மார்ட்போனில் 720×1280 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5.0 இன்ச் ஹச்டி டிஸ்ப்ளே இடம்பெறுகிறது, இந்த ஸ்மார்ட்போனில் 2ஜிபி ரேம் உடன் இணைந்து 1.3GHz அக்டா கோர் மீடியாடெக் MT6753 ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது.

இதில் மைக்ரோSD அட்டை வழியாக 128ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 16ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு உடன் வருகிறது.

PDAF மற்றும் எல்இடி ஃபிளாஷ் கொண்ட 13 மெகாபிக்சல் பின்புற கமெரா மற்றும் 5 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கமெரா கொண்டுள்ளது.

இந்த கைப்பேசியில் 2500mAh பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply