புகைப்பழக்கத்தை கைவிட உதவும் மூலிகைகள்

Loading...

புகைப்பழக்கத்தை கைவிட உதவும் மூலிகைகள்
செயின்ட் ஜான்ஸ் வோர்ட் (St. John’s wort):
இது புகைப்பழக்கத்தை ஒழிப்பதற்கான பிரபலமான மூலிகை மருந்துகளில் ஒன்றாகும். இது உடலை அமைதிப்படுத்தவும், ஓய்வெடுக்க வைக்கவும் செய்து, நிக்கோடினின் பிடியிலிருந்து விடுபட விரும்புபவர்களின், மன அழுத்தம் மற்றும் போராட்டத்தை குறைக்கவும் செய்யும்.
லோபெலியா (Lobelia):
இந்த மூலிகை நிக்கோடின் செய்யும் செயல்களைப் போன்றே அடிமையாக்காத வகையில் உங்களுடைய மூளையில் செய்யும் தன்மை கொண்டாதாகும். எனவே இது புகைப் பழக்கத்திலிருந்து விடுபட உதவும் மிகச்சிறந்த மூலிகைகளில் ஒன்றாக உள்ளது. சந்தைகளில் விற்கப்படும் புகைப் பழக்கத்தை நிறுத்தும் சில பொருட்களில் இந்த மூலிகையின் சாறுகள் பயன்படுத்தப்படுகின்றன.
ப்ளூ வெர்வெய்ன்:
மூலிகையானது இயற்கை முறையில் அமைதிப்படுத்தும் காரணியாகச் செயல்பட்டு உங்களுடைய மன அழுத்தம், பயம், பதட்டம் மற்றும் போராட்டத்தை குறைக்கவும் உதவி செய்து உங்களை சற்றே ஓய்ந்திருக்க செய்யும். இந்த வகையில் நீங்கள் நிக்கோடின் பிடியிலிருந்து வெளிவரும் போது ஏற்படும் தடங்கல்களிலிருந்து உங்களை விடுபட வைத்து, உங்களுக்கு மீண்டும் சிகரெட் பிடிக்கும் எண்ணம் வராமல் தடுக்கும் வைக்கும்.
கொரியன் ஜின்செங் (Korean ginseng):
உடலின் சக்தி அளவுகளை உயர்த்தவும் மற்றும் மன அழுத்தத்துடன் இணக்கமாக செயல்படச் செய்யவும் உதவும் சக்தி வாய்ந்த ஊக்கியாக கொரியன் ஜின்செங் செயல்படுகிறது. நீங்கள் புகைப் பழக்கத்தில் இருந்து விடுபட முயற்சி செய்து கொண்டிருக்கும் போது, உங்களுக்கு அடிக்கடி மன அழுத்தமும், மந்த நிலையும் ஏற்படும். ஜின்செங் பயன்படுத்துவதன் மூலம் இந்த புகை ஒழிப்பு அறிகுறிகளிலிருந்து விடுபட முடியும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply