பிரெட் ஸ்வீட் கச்சோரி

Loading...

பிரெட் ஸ்வீட் கச்சோரி
தேவையானவை:

பிரெட் – 5 ஸ்லைஸ்கள்
சர்க்கரை – அரை கப்
தேங்காய் துருவல் – அரை கப்
நெய் – சிறிதளவு.


செய்முறை:

சர்க்கரை, தேங்காய் துருவல் இரண்டையும் எடுத்து, அடுப்பில் ஒரு கடாயில் போட்டு இறுகும்வரை கிளறவும். பிறகு, பிரெட் துண்டுகளை தண்ணீரில் நனைத்து, உடனே நன்றாக பிழிந்து, கைகளால் பிசைந்து, கிண்ணம்போல் செய்யவும். அதன் நடுவில் தேங்காய், சர்க்கரை கலவையை வைத்து மூடி, வடை போல் உள்ளங்கையில் வைத்து தட்டி, தோசை கல்லில் போட்டு, இருபுறமும் நெய்விட்டு சிவந்தவுடன் எடுக்கவும்.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply