பிண்டி பனீர்

Loading...

பிண்டி பனீர்
தேவையானவை:

வெண்டைக்காய் – 250 கிராம், பனீர் துண்டுகள் – 200 கிராம், ஓமம் – ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் விழுது – ஒரு டேபிள்ஸ்பூன், பூண்டு – 2 பல் (நறுக்கவும்), மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள், சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.


செய்முறை:

சுத்தம் செய்த வெண்டைக்காயை நறுக்கிக் கொள்ளவும். பனீரை சிறு சிறு துண்டுகளாக வெட்டவும். கடாயில் எண்ணெய் விட்டு வெண்டைக்காயை வதக்கிக் கொள்ளவும். மற்றொரு கடாயில் எண்ணெய் விட்டு ஓமம், சீரகம் தாளித்து… நறுக்கிய பூண்டு பல், பச்சை மிளகாய் விழுது சேர்த்து வதக்கவும். இத்துடன் வதக்கிய வெண்டைக்காய், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், பனீர் துண்டுகளை சேர்த்துக் கிளறி, உப்பு சேர்க்கவும். 2 நிமிடம் குறைந்த தீயில் சமைத்தால்… பிண்டி பனீர் தயார்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply