பிடிகொழுக்கட்டை

Loading...

பிடிகொழுக்கட்டை
தேவையானவை:
பச்சரிசி ரவை – 2 கப், கடுகு – ஒரு டீஸ்பூன், உளுத்தம் பருப்பு – 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன், மிளகாய் வற்றல் – 4, இஞ்சித் துண்டுகள் – 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் துண்டுகள் – 2 டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய் – 4 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் மிளகாய் வற்றலை கிள்ளிப் போடவும். கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள் போட்டு வறுத்து, தனியாக எடுத்து வைக்கவும். அதே கடாயில் இஞ்சி, பச்சை மிளகாய் துண்டுகள், கறிவேப்பிலையை மொறுமொறுப்பாக வறுத்து எடுத்து, வறுத்தவை அனைத்தையும் பச்சரிசி ரவையில் சேர்த்து, உப்பு சேர்த்துக் கலந்து வைத்தால்… பிடிகொழுக்கட்டை ரெடி மிக்ஸ் தயார்.

பிடிகொழுக்கட்டை தேவைப்படும்போது, தேவையான அளவு ரெடி மிக்ஸ் எடுத்துக் கொள்ளவும். ஒரு பங்கு ரெடிமிக்ஸுக்கு 2 பங்கு என்ற அளவில் தண்ணீரை எடுத்து கொதிக்கவிடவும். தண்ணீரில் ரெடி மிக்ஸை தூவி கெட்டியாகக் கிளறி இறக்கவும். ஆறியதும் சிறு சிறு உருண்டைகள் பிடித்து வைக்கவும் (நீளவாட்டிலும் தயார் செய்யலாம்). அப்படியே ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

குறிப்பு:
இதை குறைந்த நேரத்தில் தயார் செய்துவிடலாம். ஆவியில் வேக வைப்பதால் எளிதில் ஜீரணம் ஆகும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply