பாஸந்தி

Loading...

பாஸந்தி
தேவையானவை:
பால் – ஒரு லிட்டர், சர்க்கரை – 150 கிராம், பாதாம் – முந்திரி துண்டுகள் – 2 டீஸ்பூன், சோள மாவு – 2 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்.


செய்முறை:
பாலை அடிகன மான பாத்திரத்தில் காய்ச்சவும். பால் குறுகி முக்கால் பாகமாக வந்ததும் சர்க்கரை சேர்த்துக் கலக்கி, கொதிக்கவிடவும். பால் பாதியாக குறுகியதும், சோள மாவை கொஞ்சம் தண்ணீர் விட்டு கரைத்து பால் கலவையில் விட்டு கலந்து கொள்ளவும். ஒரு கொதி வந்ததும் இறக்கவும். பால் பாத்திரத்தின் ஓரத்தில் படிந்துள்ள ஆடைகளையும் சேர்த்துக் கலக்கவும். இதனுடன் ஏலக்காய்தூள் சேர்த்துக் கலந்து… பாதாம் – முந்திரி துண்டுகள் தூவி, குளிர வைத்து பரிமாறவும்.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply