பால் கொழுக்கட்டை

Loading...

பால் கொழுக்கட்டை

தேவையானவை:
பால் – 750 மில்லி, பதப்படுத்திய பச்சரிசி மாவு (அரிசியை ஊற வைத்து, களைந்து, நிழலில் உலர்த்தி மெஷினில் கொடுத்து அரைத்த மாவு) – அரை கப், பொடித்த வெல்லம் – அரை கப், நெய் – ஒரு டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன், உப்பு – ஒரு சிட்டிகை.செய்முறை:
வெல்லத்தை சிறிதளவு நீரில் கரைத்து, வடிகட்டி எடுக்கவும். பச்சரிசி மாவில் உப்பு கலந்து, சிறிதளவு சுடுநீர் சேர்த்து கெட்டியாகப் பிசையவும். மாவு ஆறியதும், கையில் நெய் தடவிக் கொண்டு, மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, ஆவியில் வேக வைத்து எடுக்கவும். பாலை சுண்டக் காய்ச்சவும். 3-ல் இரண்டு பாகமாக வந்ததும், வெல்லக் கரைசலை சேர்த்துக் கொதிக்கவிடவும். கொதித்து வரும்போது ஆவியில் வேக வைத்த உருண்டைகளை மெதுவாக போடவும். மீண்டும் ஒரு கொதி வந்ததும் தீயை நிறுத்திவிடவும். பிறகு, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். தேங்காய் துருவல் தூவி அழகுபடுத்தவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply