பாம்பே சட்னி

Loading...

பாம்பே சட்னி
தேவையானவை:
கடலை மாவு – 4 டீஸ்பூன், பெரிய வெங்காயம் – ஒன்று, பச்சை மிளகாய் – 3, இஞ்சித் துருவல் – ஒரு டீஸ்பூன், கடுகு, கறிவேப்பிலை – தாளிக்கத் தேவையான அளவு, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.


செய்முறை:
வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். கடலை மாவுடன், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நீர்க்க கரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து… வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கி, கரைத்த கடலை மாவு கலவையை சேர்த்து நன்கு கிளறவும். கெட்டியானதும் இறக்கவும். இதை இட்லி, தோசை, சப்பாத்தியுடன் சைட் டிஷ்ஷாக பரிமாறலாம்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply