பாதாம் மிக்ஸ் லட்டு

Loading...

பாதாம் மிக்ஸ் லட்டு
தேவையானவை:
பாதாம் டிரிங்க் மிக்ஸ் – 100 கிராம், சிறுபருப்பு (பயத்தம்பருப்பு) – 100 கிராம், வறுத்த வேர்க்கடலை – 50 கிராம், பொட்டுக்கடலை – 50 கிராம் (வறுக்க வேண்டாம்), துருவிய வெல்லம் தேவைக்கேற்ப, தேங்காய்த் துருவல் அரை கப், நெய் தேவையான அளவு, ஏலக்காய்த்தூள் ஒரு டீஸ்பூன், உடைத்த முந்திரி சிறிதளவு.


செய்முறை:
பயத்தம்பருப்பை சற்று வாசனை வரும்வரை வறுத்து, மிக்ஸியில் நன்கு பொடிக்கவும். வறுத்த வேர்க்கடலை, பொட்டுக்கடலையையும் பொடிக்கவும். தேங்காய்த் துருவலை ஈரம் போக வதக்க வும். பின்னர் எல்லாவற்றையும் பாதாம் டிரிங்க் மிக்ஸில் சேர்த்துக் கலக்கவும். பிறகு, ஏலக்காய்த்தூள், உடைத்த முந்திரி, துருவிய வெல்லைத்தை மாவுடன் கலக்கவும். நெய்யை சற்று காயவைத்து, கொஞ்சம் கொஞ்சமாக மாவில் ஊற்றி நன்கு கலந்து, மாவை லட்டுகளாகப் பிடிக்கவும்.
மிகவும் சுவையான, சத்தான லட்டு இது!

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply