பழம் மட்­டு­மல்ல தோலும் அழ­குக்குத் தான்

பழம் மட்­டு­மல்ல தோலும் அழ­குக்குத் தான்இயற்கை ஓர் அற்­புதம்; அதன் கொடை மகத்­தா­னது. அந்த வகையில், இயற்­கை­யான முறையில் விற்ற­மின்கள் மற்றும் தாது­உப்­புக்­களை அளிக்­கக்­கூ­டி­யவை பழங்­களும் காய்­க­றி­களும். பழத்­தை­விட, தோலில் அதிகச் சத்து உள்­ளது என்­பது பொது­வான கருத்து. மாதுளை, பலா உள்­ளிட்ட பல பழங்­களின் தோல்கள் கடி­ன­மா­ன­வை­யாக இருக்கும்; பயன்­ப­டுத்த முடி­யாது.

ஆனால், கொய்யா, மாம்­பழம், ஆப்பிள் போன்ற சில பழங்­களைத் தோலுடன் சாப்­பிட முடியும்.

இங்கே சில பழத் தோல்­களும் அவற்றின் பயன்­களும்…


மாம்­பழம் :

மாம்­ப­ழத்தில் அன்­டிஅக்­ஸிடன்ட் அதிக அளவு உள்­ளது. இரும்­புச்­சத்து நிறைந்த மாம்­பழம் கர்ப்­பி­ணி­க­ளுக்குச் சிறந்­தது.

மாம்­ப­ழத்தில் உள்ள அள­வுக்கு, அதன் தோலிலும் விற்றமின் சி சத்து அடங்கி உள்­ளது.

மாம்­ப­ழத்­தோலைக் கூழாக்கி, அத­னுடன் பால் கலந்து சரு­மத்தில் தடவி வந்தால், கரு­வ­ளையம் மெல்ல நீங்கும். இத­னுடன் சிறிது தேன் கலந்து, கழுத்தில் கரு­மை­யாக இருக்கும் பகு­தி­களில் தட­வினால் நல்ல பலன் கிடைக்கும்.


வாழை :

வாழைப்­ப­ழத்தில், விற்றமின் சி, மாங்­கனீஸ், பொட்­டா­சியம், கல்­சியம் உட்­பட ஏரா­ள­மான சத்­துக்கள் உள்­ளன.

இதன் தோலைத் தவிர மற்ற அனைத்துப் பாகங்­க­ளையும் நாம் பயன்­ப­டுத்­து­கிறோம்.

தோலும்­கூட பயன் தரக்­கூ­டி­ய­துதான். வாழைப்­பழத் தோலை வெயிலில் நன்கு உல­ர­வைத்து, அதைப் பொடி செய்து கொள்­ளவும்.

இந்தப் பொடியில், மா­ச்சத்து, புர­தச்­சத்து நிறை­வாக உள்­ளது.

இதை, பாலில் கலந்து பயன்­ப­டுத்­தினால், அது முழு உண­வாகச் செயற்­படும்;

பாலின் சுவை­யையும் கூட்டும். வாழைப்­ப­ழத்­தோலின் உட்­ப­கு­தியைப் பற்­களில் தேய்த்­து­வர, பல்லின் மஞ்சள் தன்மை நீங்கி, பளிச் வெண்மை பெறும்.


ஒரஞ்சு :

விற்றமின் சி அதிகம் உள்ள இந்தப் பழம், புற்­றுநோய் தடுப்­பா­னாகச் செயற்­ப­டு­கி­றது. ‘ஒரஞ்சு’ போன்ற சிட்ரஸ் பழங்கள், இரத்­தத்தில் உள்ள கொலஸ்ட.ே­ராலைக் குறைக்கும் வல்­லமை கொண்­டவை.

ஓரஞ்சு எளிதில் செரி­மானம் ஆகக்­கூ­டி­யது. பாத வெடிப்­பு­களில் தோலைப் பூசி வந்தால், ஒரு வாரத்தில் நல்ல பலன் கிடைக்கும்.

ஆரஞ்­சுப்­பழத் தோலை சேக­ரித்து, ரூம் ஃப்ரெஷ்­ன­ராகப் பயன்­ப­டுத்­தலாம். ஆரஞ்­சுப்­பழத் தோலுடன் சிறிது உப்பு சேர்த்து, வாஷ்­பேஸின், கிச்சன் மேடை போன்­ற­வற்றைச் சுத்­தப்­ப­டுத்த ஸ்க்ரப்பர் போலப் பயன்­ப­டுத்­தலாம்.

ஆரஞ்­சுப்­பழத் தோலைப் பொடி செய்து, டீத்­தூ­ளுடன் சிறி­த­ளவு சேர்த்துப் பயன்­ப­டுத்த, டீயின் சுவை கூடும்.

தொடர்ந்து எடுத்­து­வந்தால், புற்­றுநோய் மற்றும் இதய நோய்க்­கான வாய்ப்பைக் குறைக்கும். மேலும், இந்தப் பொடி­யுடன் சிறி­த­ளவு பால், தயிர் சேர்த்து, ஃபேஸ்பேக் போல பயன்­ப­டுத்த, பொலி­வி­ழந்த முகம் களை­கட்டும். ஆரஞ்­சுப்­பழத் தோல் பொடிக்கு, பற்­கூச்­சத்தை நீக்கும் வல்­லமை உண்டு.

இதனை, வீட்டுத் தோட்­டத்­துக்கு உர­மா­கவும் பயன்­ப­டுத்­தலாம். இதன் தோலில் இருந்து சாறு எடுத்து, முகத்­துக்குப் பூசி­வர கரும் புள்­ளிகள் நீங்கி, முகம் பள­ப­ளப்­பாக மாறும்.


மாதுளை :

மாது­ளம்­ப­ழத்தைப் போலவே, இதன் தோலும் அதிகப் பலன் கொண்­டது.

பெரும்­பாலும் இதைச் சருமப் பரா­ம­ரிப்­புக்குப் பயன்­ப­டுத்­தலாம். மாது­ளம்­பழத் தோலைப் பொடி செய்து, அத­னுடன் சம அளவு பயத்தம் பருப்பைக் கலந்து, குளித்­தாலோ, உடலில் பூசிக்­கொண்­டாலோ, வியர்வை துர்­நாற்றம் நீங்கும்; உட­லுக்குக் குளிர்ச்­சியை ஏற்­ப­டுத்தும்.

இந்தப் பொடியை நீருடன் கலந்து கொப்­ப­ளிக்க, வாய்­ துர்­நாற்றம் நீங்கும். மாது­ளம்­பழத் தோலின் பொடி­யுடன், பால், ரோஸ் ேவாட்டர் கலந்து, முகத்தில் பேஸ்பேக் போடலாம். ரூம் ப்ரெஷ்­ன­ராகப் பயன் படுத்­தலாம்.

மாது­ளம்­பழத் தோலைப் பொடித்து, தண்­ணீர்­விட்டுக் குழைத்து, சருமம், தலையில் தேய்த்து, 10 நிமி­டங்கள் கழித்துக் குளித்தால், முகப்­பரு உள்­ளிட்ட சருமப் பிரச்சி­னைகள், முடி உதிர்தல் நீங்கும். மாது­ளம்­பழத் தோலைச் சாப்­பிட்டால், இதய நோய்கள் வராமல் காக்கும். எலும்பை வலு­வாக்கும்.


எலு­மிச்சை :

எலு­மிச்­சையில் அதிக கல்­சியம், போலிக் அமிலம் மற்றும் சிட்ரிக் அமிலம் உள்­ளன. தாகம் தணிக்கும்; தலை­வலி நீக்கும்;

ஸ்கர்­வியைத் தடுக்கும்… என நல்ல பல பலன்­களைத் தரும் எலு­மிச்சைத் தோலை பல வழி­களில் பயன்­ப­டுத்­தலாம். எலு­மிச்சைத் தோல் அன்­டி­ஆக்­ஸி­டன்­டாகச் செயற்­ப­டு­கி­றது. சில­ருக்குக் கை, கால் முட்­டி­களில் கறுப்­பாக இருக்கும்.

எலு­மிச்சைத் தோலை கரு­மை­யான இடங்­களில் தேய்த்­து­வர, கருமை நீங்கி, நல்ல பலன் கிடைக்கும். மேலும், இது சரு­மத்­துக்குப் பள­ப­ளப்­பையும் தர வல்­லது.

எலு­மிச்­சைப்­பழத் தோலில் உள்ள எண்ணெய், நறு­மணத் தைலங்கள் தயா­ரிக்க உதவும். எறும்பு போன்ற பூச்­சி­களைத் தடுக்கும் ேசாக்பீஸ் பயன்­ப­டுத்­து­வ­தற்குப் பதி­லாக, எலு­மிச்­சைப்­பழத் தோலை பயன்­ப­டுத்­தலாம்.

பொடுகுத் தொல்லை இருப்­ப­வர்கள், எலு­மிச்­சைப்­பழத் தோலை நன்கு கசக்கி, தலையில் தேய்த்து, 10 நிமி­டங்கள் ஊற­வைத்துக் குளித்தால், பொடுகு குறைந்து, சில வாரங்­களில் நல்ல பலன் தெரியும். சில குளிர்­சா­தனப் பெட்­டி­களைத் திறந்­தாலே துர்­நாற்றம் வீசும்.

இதைக் கட்­டுப்­ப­டுத்த, எலு­மிச்­சைப்­பழத் தோலை அதில் போட்டு வைக்­கலாம்.

மைக்­ரோவேவ் அவனைத் தூய்­மைப்­ப­டுத்த, எலு­மிச்­சைப்­பழத் தோலைப் பயன்­ப­டுத்­தலாம். எலு­மிச்­சைப்­பழத் தோலை நகங்கள் மீது தேய்க்க பள­ப­ளப்புக் கிடைக்கும்.

Loading...
Rates : 0
VTST BN