பற்களின் கறையைத் தடுக்க இயற்கை வழிகள்!

Loading...

பற்களின் கறையைத் தடுக்க இயற்கை வழிகள்!பற்களின் பழுப்பு நிறத்துக்கும் கறைகளுக்கும் இரண்டு காரணங்கள் இருக்கலாம். புகை பிடிப்பது, கஷாயம் குடிப்பது, பான்பராக் போடுவது போன்ற வெளிப்புறக் காரணங்களால் நிறம் மாறுவது ஒரு வகை. பிறக்கும்போதே பற்கள் பழுப்பு அல்லது மஞ்சள் நிறத்தில் இருப்பது இன்னொரு வகை. இதில் முதல் வகைக் கறைகளை ‘டூத் ஒயிட்டனிங்’ சிகிச்சையில் சரியாக்கலாம். பிளீச் என நீங்கள் கேள்விப்பட்ட சிகிச்சைதான் இது! இதில் ஒருவித பிரத்யேக அமிலத்தைப் பயன்படுத்துவோம். அதை நீர்க்கச் செய்து, பற்களின் எனாமலில் தடவி விட்டு, ஒருவித விளக்கைக் காட்டி செயல்படச் செய்வோம். அது பற்களின் மேலுள்ள ‘ஸ்மியர்’ என்கிற லேயரை எடுத்து, பற்களை பளீரென மாற்றும். பிறப்பிலேயே நிறம் மாறியிருக்கும் பற்களை கேப், லேமினேட் போன்ற வேறு சிகிச்சைகளால்தான் மறைக்க முடியும். இதற்கு டூத் ஒயிட்டனிங் பலனளிக்காது. டூத் ஒயிட்டனிங் சிகிச்சையை 6 மாதங்களுக்கொரு முறை செய்து கொள்ளலாம். அது எந்தவித பக்க விளைவையும் உண்டாக்காது. நீங்கள் சொல்கிற ‘ஹோம் கிட்’ பயன்படுத்தும் முன் முறைப்படி பல் மருத்துவரிடம் போய் பற்களை ஸ்கேலிங் மற்றும் பாலீஷிங் செய்திருக்க வேண்டும். அப்போதுதான் அந்த அமிலம் உள்ளே போகும். காபி, டீ, கோலா குடித்த பிறகு வாய் கொப்பளிப்பது, புகை, பான் பராக் பழக்கங்களை விடுவது, சாப்பிட்ட பிறகு பிரஷ் செய்வது… இதெல்லாம் பற்களில் கறை படியாமல் தடுக்கும் இயற்கை வழிகள்!

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply