பருப்பு உசிலி

Loading...

பருப்பு உசிலி

தேவையானவை:

துவரம்பருப்பு – ஒரு கப், மிளகாய் வற்றல் – 4.


செய்முறை:

துவரம்பருப்புடன் மிளகாய் வற்றல் சேர்த்து கொரகொரப்பாக மெஷினில் அரைத்து வாங்கவும் (மிக்ஸியிலும் அரைத்து எடுக்கலாம்). இதுதான் பருப்பு உசிலி ரெடி மிக்ஸ்.

தேவைப்படும்போது பருப்பு உசிலி மிக்ஸில் தண்ணீர் தெளித்து பிசிறி 30 நிமிடம் ஊற வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து… பிசிறி வைத்த பருப்பு உசிலி மிக்ஸ், உப்பு சேர்த்துக் கிளறவும். பருப்பு வெந்ததும் வேக வைத்த காய்கறியை தண்ணீர் வடித்து சேர்த்து, சூடுபட கிளறி இறக்கவும்.

குறிப்பு:
கொத்தவரங்காய், பீன்ஸ், வாழைப்பூ, கோஸ் போன்றவற்றைப் பயன்படுத்தி பருப்பு உசிலி செய்யலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply