பரங்கிக்காய் புளிப் பச்சடி

Loading...

பரங்கிக்காய் புளிப் பச்சடி
தேவையானவை:
சிவப்பு பரங்கிக்காய் – ஒரு கீற்று, புளி – பெரிய நெல்லிக்காய் அளவு, மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை, பனை வெல்லம் – 50 கிராம், தேங்காய்த் துருவல் – 4 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 1, எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.


செய்முறை:
பரங்கிக்காயைத் தோல் சீவிப் பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, பரங்கித் துண்டுகள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து, சிறிது வதக்கி, புளியைக் கரைத்துக் கொதிக்கவிடவும். காய்ந்த மிளகாய், தேங்காய்த் துருவலை மிக்ஸியில் அரைத்துச் சேர்த்து, பனை வெல்லம் சேர்த்து, கொதிக்கவிடவும். கடுகு, உளுத்தம் பருப்பைத் தாளித்து இறக்கவும்.


குறிப்பு:
சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். உப்புமா, இட்லிக்கு தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும்.

பலன்கள்:
நீர்ச்சத்து, மாவுச்சத்து, சிறிதளவு பீட்டா கரோட்டின் இருப்பதால், கண், தோலுக்கு நல்லது. நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். அசிடிட்டி இருப்பவர்கள் சர்க்கரை நோயாளிகள் தவிர்க்கவும். குழந்தைகள், கர்ப்பிணிகள், வயதானவர்கள் எடுத்துக்கொள்ளலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply