பரங்கிக்காய் பால் கூட்டு

Loading...

பரங்கிக்காய் பால் கூட்டு
தேவையானவை:
பால் – ஒரு கப், தோல் சீவிய பரங்கிக்காய் துண்டுகள் – ஒரு கப், கடுகு – அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – ஒன்று, பொடித்த வெல்லம் – அரை கப், நெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – ஒரு சிட்டிகை.


செய்முறை:
பரங்கிக்காயில் பால் விட்டு குக்கரில் வேக வைத்து எடுத்து மசித்து, உப்பு சேர்த்துக் கலக்கவும். கடாயில் நெய் விட்டு, சூடானதும் காய்ந்த மிளகாய், கடுகு, உளுத்தம்பருப்பு தாளிக்கவும். இதில் பரங்கிக்காய் கலவையைப் போட்டுக் கலக்கவும். பிறகு, பொடித்த வெல்லம் போட்டு நன்கு கலக்கவும். இறுகி, கெட்டியானதும் இறக்கவும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply